ETV Bharat / state

திமுகவின் 'எல்லோரும் நம்முடன்' இணையவழி உறுப்பினர் சேர்க்கை - திமுக தலைவர் ஸ்டாலின்

கோயம்புத்தூர்: தமிழ்நாட்டை எழுச்சிப்பெற செய்ய 'எல்லோரும் நம்முடன்' என்ற இணையவழி உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

இணையவழி புதிய உறுப்பினர்கள் சேர்க்கை
இணையவழி புதிய உறுப்பினர்கள் சேர்க்கை
author img

By

Published : Sep 19, 2020, 3:42 PM IST

'எல்லோரும் நம்முடன்' என்ற தலைப்பில் இணைய வழியில் திமுக தலைவர் ஸ்டாலின் உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கியுள்ளார். இளைஞர்கள் பலரும் இந்த இணைய வழி சேர்க்கையில் இணைந்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக கோயம்புத்தூர் சிங்காநல்லூர் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் நா.கார்த்திக் இந்த இணைய வழி சேர்க்கையை தொடங்கிவைத்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திக், “திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ள இந்தத் திட்டத்தின் மூலம் 45 நாட்களில் 25 லட்சம் புதிய உறுபினர்களை சேர்க்க திட்டமிடப்பட்டு உள்ளது.

கோயம்புத்தூர் கிழக்கு மாவட்டத்தில் உள்ள இளைஞர்களை இன்று (செப்டம்பர் 19) இணைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. கோயம்புத்தூரில் பல்வேறு இடங்களில் முகாமிட்டு இந்த இணைய வழி சேர்க்கையை நடத்த உள்ளோம்.

மேலும் செல்போன் மூலமாகவும் இணையலாம், தமிழ்நாட்டை எழுச்சிப்பெற செய்ய இந்த இணைய வழி சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது“ என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.