ETV Bharat / state

'நானும் ஒரு பெண் தான்... எனக்கும் வலிக்கும்' - மீனா ஜெயக்குமார் நீக்கத்திற்குண்டான காரணம் இதுதான்! - covai latest news

கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், திமுக மாநில மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

dmk-meena-jayakumar-dismissed-from-the-party

author img

By

Published : Mar 6, 2022, 9:11 PM IST

கோவை : காளப்பட்டி பகுதியில் கடந்த வாரம் திமுக கவுன்சிலர்கள் கூட்டம் மற்றும் கோவை ஒருங்கிணைந்த செயற்குழு கூட்டம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

இதில் திமுக நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, திமுக மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக், மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா ஆர்.கிருஷ்ணன், பொள்ளாச்சி எம்.பி சண்முகசுந்தரம், முன்னாள் எம்.பி. நாகராஜ் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர்.

இதில், தேர்தல் வெற்றிக்குப் பின்னர் கட்சியை மேலும் வலுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து இக்கூட்டத்தில் மாநில மகளிர் தொண்டர் அணி துணைச்செயலாளர் மீனா ஜெயக்குமார் கலந்து கொண்டார். மீனா ஜெயக்குமார் நகர்ப்புற தேர்தலில் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பதற்கு முன்பே தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து, தேர்தல் பரப்புரையிலும் ஈடுபட்டார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியைப் புகழ்ந்த மீனா ஜெயக்குமார்

ஆனால், தேர்தலில் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தியில் விலகி இருந்தவர், இந்த செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் பேசிய அவர் தன் உள்ளக்குமுறலை கொட்டித்தீர்த்தார். அப்போது மீனா ஜெயக்குமார் பேசியதாவது, 'தேர்தலில் தனக்கு சீட் கிடைக்காதற்குக் காரணம் கோவை கிழக்கு மாநகர் மாவட்டப் பொறுப்பாளர் கார்த்திக் தான். அவர் என் வெற்றியைத் தடுத்தார். கோவை மாவட்டத்தில் திமுக இவ்வளவு பெரிய வெற்றி பெற அமைச்சர் செந்தில் பாலாஜி காரணம்.

அமைச்சர் செந்தில் பாலாஜியை கோவை பொறுப்பாளராக நியமித்தவுடன், தலைவர் கோவைக்கு ஒரு நல்ல ஆண்மகனை அனுப்பி வைத்துள்ளார் என்று என் நண்பர்களுடன் கூறினேன். ஆம். உண்மையைத் தான் சொன்னேன். நாம செய்யவேண்டியதை அவர் செய்துள்ளார். மனதில் இருப்பதை ஓப்பனாக பேசுவதால், பல இடங்களில் நான் பேசுவதில்லை.

தன்மானத்தை உரசிப் பார்க்கும்போது அதற்குப் பதிலடி கொடுக்க வேண்டும். எனக்கும், மாவட்டப் பொறுப்பாளர் கார்த்திக்கிற்கும் பெரிதாகப் பிரச்னை இல்லை. ஒரு இடத்தகராறில் தான் கீறல் தொடங்கியது. மாவட்டப் பொறுப்பாளர் கார்த்திக் என் வெற்றியைத் தடுத்த முதல் ஆள். சமூக வலைதளம், ஊடகங்கள் மூலம் என்னைப்பற்றிய தவறான தகவல்களை பரப்பினார். தீண்டத்தகாதவர்களைப் போல நடத்தினார்.

'நானும் ஒரு பெண் தான், எனக்கும் வலிக்கும்'

நான் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவள் என்றெல்லாம் கூறினார். நானும் ஒரு பெண் தான். எனக்கும் வலிக்கும். எல்லோரும் மனிதர்கள் தான். அவர் மனைவிக்கு சீட் வேணும் என்றால் அவர் தாரளமாக கேட்டிருக்கலாம். அதற்காக எனக்கான வாய்ப்பை மறுப்பதா? என் வளர்ச்சியைத் தடுக்க இவர் யார்' என ஆவேசமாகப் பேசினார்.

ஒரு கட்டத்தில் மீனா ஜெயக்குமார் ஒருமையில் பேச, கார்த்திக்கின் ஆதரவாளர்கள் மீனா ஜெயக்குமாருக்கு எதிர்ப்புத்தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து குறுக்கிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி எல்லோரும் இருக்கும் இடத்தில் தனிப்பட்ட முறையில் பேச வேண்டாம் என்றும்; தங்கள் பிரச்னைகளை என்னிடம் கடிதமாக கொடுங்கள் எனவும் கூறியிருக்கிறார்.

மீனா ஜெயக்குமார்
மீனா ஜெயக்குமார்

கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கம்

இதனைத்தொடர்ந்தும் மீனா ஜெயக்குமார் தொடர்ந்து பேச முயற்சி செய்தபோது, அவரை திமுக மூத்த நிர்வாகிகள் சமாதானப்படுத்தி அமர வைத்தனர்.

இந்நிலையில் திமுக மாநில மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் கட்சி கட்டுப்பாட்டை மீறி, திமுக கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மீனா ஜெயக்குமார் என்ன முடிவு எடுப்பார் என்பதை நாமும் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இதையும் படிங்க : கடலூர் திமுக எம்எல்ஏ கட்சியிலிருந்து நீக்கம்; கோவையிலும் பாய்ந்த ஒழுங்கு நடவடிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.