ETV Bharat / state

காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுகவினர் ஆட்சியரிடம் மனு

கோவை: சட்டத்திற்கு  விரோதமான செயல்களில் ஈடுபட்டுவருவதாக மதுக்கரை காவல் ஆய்வாளர்  தூயமணி வெள்ளைச்சாமியை உடனடியாக பணியிடமாற்றம் செய்யக் கோரி  திமுக பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

petition
petition
author img

By

Published : Feb 3, 2020, 7:58 PM IST

கோவை மாவட்டம் மதுக்கரை காவல் நிலையத்தில் ஆய்வாளர் தூயமணி வெள்ளைச்சாமி பணிபுரிந்துவருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இந்த காவல் நிலையத்தில் ஆய்வாளராக உள்ளார். அவர் சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டுவருவதாகக் கூறி அவர் மீது நடவடிக்கை வேண்டும் என கோவை புறநகர் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.

காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுகவினர் ஆட்சியரிடம் மனு

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தென்றல் செல்வராஜ், " மதுக்கரை காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் தூயமணி வெள்ளைச்சாமி, அதிமுக மாவட்ட செயலாளராகவும், எஸ்.பி வேலுமணிக்கு பினாமியாகவும் செயல்பட்டு வருகிறார். மேலும் அங்கு திராவிட முன்னேற்ற கழகத்தை அழிக்கும் செயல் முறைகளை செய்து வருகிறார். லாட்டரி சீட்டுகள் விற்பனை, மணல் கொள்ளை போன்றவற்றுக்கு துணைபோகிறார். எனவே தூயமணி வெள்ளைச்சாமியை உடனடியாக பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளேன்" என்றார்.

இதையும் படிங்க : ஏழை எளிய மக்களுடன் சமபந்தி விருந்தில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர்!

Intro:மதுக்கரை காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுகவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

Body:கோவை மதுக்கரை காவல் நிலைய ஆய்வாளர் தூயமணி வெள்ளைச்சாமி. ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக காவல் நிலைய ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.
அவர் சட்டத்திற்கு விரோதமான செயல்களை செய்வதாக கூறி கோவை புறநகர் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தென்றல் செல்வராஜ் மதுக்கரை காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் தூயமணி வெள்ளைச்சாமி ஆய்வாளராக மட்டுமில்லாமல் அதிமுக மாவட்ட செயலாளராகவும் எஸ் பி வேலுமணி பினாமியாகும் செயல்பட்டு வருவதாக கூறினார். மேலும் அங்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் அழிக்கும் செயல் முறைகளை செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.

மேலும் அவர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கேரளாவில் இருந்து வரும் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாகவும் எம் சாண்ட் மணல் அதிகமாக கடத்தப்படுவதாக வும் அதற்கு அவர் உதவியாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றால் புகார் அளிப்பவர்கள் மீதே வழக்கு பதிவு செய்வதாகவும் தெரிவித்தார்.

எனவே தூயமணி வெள்ளைச்சாமி உடனடியாக வேலை இடமாற்றம் செய்ய வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரிடம் தென்றல் செல்வராஜ் மனு அளித்தார்.

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.