கோவை மாவட்டம் வால்பாறை (தனி) சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமி ஆனைமலையில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் வெங்கடாசலத்திடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்து உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
முன்பாக, ஆனைமலையில் உள்ள அதிமுக தேர்தல் அலுவலகத்தில் இருந்து சேத்துமடை பொள்ளாச்சி ரோடு வழியாக ஊர்வலமாக மேளதாளங்கள் முழங்க ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
இது குறித்து அமுல் கந்தசாமி செய்தியார்களிடம் கூறுகையில், ‘’கடந்த 5 ஆண்டுகளாக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர், உள்ளாட்ச்சி துறை அமைச்சரால் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு மற்றும் ஆனைமலை பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மேம்படுத்தல், தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொது மக்களின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்’’ என்றார். இவருடன், வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் கஸ்தூரி வாசு ஒன்றிய செயலாளர்கள் மா. சுந்தரம், அப்புசாமி கார்த்திகேயன் இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் சாந்தலிங்க குமார், அவிநாசி சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் எம்எல்ஏ கந்தசாமி உடனிருந்தனர்.
இதையும் படிங்க: விவசாயிகளுக்கு ஆதரவாக 3 ஆயிரம் கிலோ மீட்டர் விழிப்புணர்வு பயணம்!