கோவையில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், திமுக தலைமை அலுவலகத்தில் ஜூன் 1ஆம் தேதி நடைபெற்றது. திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திக் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கோடைகாலம் முடிந்த நிலையிலும் கோவை மாநகராட்சி சரியான முறையில் குடிநீர் வழங்காமல் 10 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்குவதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
2010ஆம் ஆண்டு திமுக அறிவித்த எஸ்.ஐ.ஹெச்.எஸ். காலனி ரயில்வே உயர்மட்ட மேம்பாலம் பணிகள் தற்போது வரை முடிக்கப்படாமல் உள்ளது. உடனடியாக பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி ஜூன் 7ஆம் தேதி அனைத்துக் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப் போகிறோம். மேலும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாததால் பொதுமக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு கூட தீர்வு ஏற்படவில்லை எனவே உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்திட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.