கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் மக்கள் நீதி மய்யம் தெற்கு மாவட்ட செயலாளர் மயூரா சுப்பிரமணியம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, "மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கியதில் இருந்து பணியாற்றி வருகிறோம். சட்டப்பேரவைத் தேர்தலில் துணைத் தலைவர் டாக்டர். மகேந்திரன் கட்சிக்காக தனது மருத்துவர் பணியை விட்டுவிட்டு பணியாற்றினார்.
தனது சொந்தப் பணத்தையும் செலவழித்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் பணியாற்றி வந்தார். கோயம்புத்தூரில் டாக்டர் மகேந்திரன் செல்வாக்குப் பெற்ற நிலையிலும், தேர்தலில் கமல்ஹாசன் தோல்வியை சந்தித்தது மிகவும் வருந்தத்தக்கதாகும்.
டாக்டர். மகேந்திரன் கட்சியை விட்டு விலகியதால், நானும் தெற்கு மாவட்ட முக்கியப் பொறுப்புகளில் உள்ள கட்சி நிர்வாகிகளும் ராஜினாமா கடிதத்தை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு அனுப்பி வைத்துள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: மு.க ஸ்டாலின் அவர்களுக்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள் - கமல்ஹாசன்!