கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த சின்ன நெகமம் ஊராட்சிக்கு உள்பட்ட அய்யம்புதூர் பகுதியில் வசிக்கும் 90 குடும்ப அட்டைதாரர்கள், அருகில் உள்ள சின்ன நெகமம் ரேஷன் கடைக்குச் சென்று தமிழ்நாடு அரசு வழங்கும் ரேஷன் பொருள்களைப் பெற்று வந்தனர்.
இந்நிலையில், அப்பகுதி மக்கள் அய்யம்புதூரில் ரேஷன் கடையைத் திறக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். அதனைத் தொடர்ந்து பொள்ளாச்சி சட்டப்பேரவை உறுப்பினரும், துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் நடமாடும் ரேஷன் கடையைத் தொடங்0கி வைத்து பொதுமக்களுக்கு பொருள்களை வழங்கினார்.
இதையடுத்து, 90 குடும்ப அட்டைதாரர்களுக்கு வாரம்தோறும் செவ்வாய்கிழமை காலை முதல் மாலை வரை பொருள்கள் வழங்கப்படும் என குடிமைப் பொருள் அலுவலர்கள் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் இரா.வைத்தியநாதன், சின்ன நெகமம் ஊராட்சிமன்றத் தலைவர் செந்தில் பிரபு, நெகமம் முன்னாள் பேருராட்சி மன்றத்தலைவர் சோமசுந்தரம் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:அம்மா நகரும் நியாயவிலைக் கடை: அமைச்சர்கள் தொடங்கிவைப்பு