கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு தொழிற்சங்கங்களின் சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், “வருங்காலத்தில் உரிய சம்பளம் வழங்கவும் வேலை நீக்கம், ஆட்கள் குறைப்பு போன்றவற்றை நிறுத்தவேண்டும்.
ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் தலா 7, 500 ரூபாய் வீதம் மொத்தம் 22 ஆயிரத்து 500 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்” எனக் கூறினர்.
தொடர்ந்து மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை மசோதா, அத்தியாவசியப் பொருள்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்
கோயம்புத்தூர்: தொழிற்சங்கங்கள் சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.