தமிழ்நாடு கட்டட தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக இலவச வீட்டுமனை கேட்டு கடந்த 9 ஆண்டு காலமாக போராடி வருகின்றனர். இதனை ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், இன்று (பிப்ரவரி 15) கோயம்புத்தூர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி, தமிழ்நாடு கட்டட தொழிலாளர்கள் மத்திய சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்தை மாநில துணைத் தலைவர் ராஜேந்திரன் தொடங்கிவைத்தார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவர்களது 9 ஆண்டு கோரிக்கையான வீட்டு மனையை ஒதுக்கித் தர வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
தமிழ்நாடு அரசு உடனடியாக இதனைக் கவனத்தில் ஏற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர். அதனைத் தொடர்ந்து அவர்களது கோரிக்கையை மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.