ETV Bharat / state

Periyar Dravidar Kazhagam protest: பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ரயில் நிலையங்களை சேலம் கோட்டத்துடன் இணைக்கக்கோரி ஆர்ப்பாட்டம் - பொள்ளாச்சி கிணத்துக்கடவு ரயில் நிலையங்கள்

Periyar Dravidar Kazhagam protest: பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ரயில் நிலையங்களை சேலம் கோட்டத்துடன் இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரியார் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்
பெரியார் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்
author img

By

Published : Dec 27, 2021, 9:26 PM IST

Periyar Dravidar Kazhagam protest: கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, பொள்ளாச்சி - கிணத்துக்கடவு ரயில் நிலையங்களை சேலம் கோட்டத்துடன் இணைக்க வேண்டும், திருச்செந்தூர் ரயிலை கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக இயக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டம் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் பேசியதாவது, "பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு திண்டுக்கல் அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு, கோவை வழியாக ரயில்களை இயக்காமல் ரயில்வே துறை கோவையைப் புறக்கணித்து வருகிறது.

திருச்செந்தூர் ரயில் மேட்டுப்பாளையத்திலிருந்து இயக்கப்படாமல், பாலக்காட்டில் இருந்து இயங்கி வருகிறது. மேலும் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ஆகிய இரண்டு ரயில் நிலையங்களையும் சேலம் கோட்டத்தில் இணைக்க வேண்டும்" என்றார்.

பெரியார் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்

இதையும் படிங்க: Sterlite protest: தூத்துக்குடி முன்னாள் எஸ்பி ஒரு நபர் ஆணையத்தில் மீண்டும் ஆஜர்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.