ETV Bharat / state

அறிவுசார் மையத்தில் ஆதியோகி புகைப்படம் - உடனடியாக அப்புறப்படுத்த தபெதிக வலியுறுத்தல்!

Adiyogi Photo Issue: அறிவுசார் மையத்தில் இடம்பெற்றுள்ள ஆதியோகி புகைப்படத்தை அரசு உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என தந்தை பெரியார் திராவிடர் கழகம் வலியுறுத்தியுள்ளது.

Demand to remove Adiyogi photo from Knowledge Center
அறிவு சார் மையத்தில் இருந்து ஆதியோகி புகைப்படத்தை நீக்க வலியுறுத்தல்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 5, 2024, 4:34 PM IST

கோயம்புத்தூர்: கோவை மாநகராட்சி சார்பில் ஆடிஸ் வீதியில் அமைக்கப்பட்டு உள்ள நூலகம் மற்றும் அறிவு சார் மையம், 20 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை, தமிழர் பாரம்பரிய சிலைகள் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.05) காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இந்த அறிவு சார் நூலகத்தில் உள்ள புத்தகங்கள் வைக்கும் அலமாரியில், கோவையின் பாரம்பரியச் சின்னங்கள் மற்றும் அடையாளச் சின்னங்கள் இடம்பெற்று உள்ளன. இந்நிலையில், முதல் தளத்தில் உள்ள அலமாரியில் ஆதியோகி புகைப்படம் இடம்பெற்று உள்ளது. இதைத் தொடர்ந்து, இதனை அரசு உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என தந்தை பெரியார் திராவிடர் கழகம் வலியுறுத்தி உள்ளது.

இதையும் படிங்க: சட்ட விரோத மணல் விற்பனை வழக்கு; அமலாக்கத்துறை சம்மனுக்கு நீதிமன்றம் தடை விதிப்பு..!

இது தொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அறிவு சார் மையத்திற்கும், ஆதியோகிக்கும் என்ன சம்பந்தம்? ஏற்கனவே திட்டமிட்டு, கோவையின் அடையாளம் என்பது போல் ஈசாவை உருவகப்படுத்தி வருகிறார்கள். தற்போது அறிவு சார் மையத்திலும் ஆதியோகி படத்தை நுழைத்து இருக்கின்றனர்.

அரசு உடனடியாக அந்தப் படத்தை அப்புறப்படுத்த வேண்டும். அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் தந்தை பெரியார் திராவிடர் கழகம் இதனைக் கண்டித்து போராட்டம் நடத்தும்” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: மனநலம் பாதிக்கப்பட்ட நபரைத் தாக்கிய அரசு பேருந்து ஊழியர்கள் பணியிடை நீக்கம்! குமரியில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.