சென்னை திருவான்மியூர் ஈஸ்ட் மாதா தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் (56). இவர் சொந்தமாக டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி இவர் சென்னை மாநகராட்சி வார்டு அலுவலகத்தில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று திடீரென ராமலிங்கத்திற்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராமலிங்கம் நேற்று (ஏப்.10) மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து மருத்துவமனை அளித்த தகவலின் பேரில், திருவான்மியூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், கரோனா தடுப்பூசி போட்டு கொண்டதால்தான் ராமலிங்கம் இறந்ததாக அவரது மகன்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், ராமலிங்கத்தின் உடற்கூராய்வு முடிவுக்கு பிறகே இறந்ததற்கான காரணம் தெரியவரும் என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: