ETV Bharat / state

'தமிழர் நலன் காக்க திமுக கூட்டணியினரை வெற்றிபெறச் செய்யவேண்டும்' - ஆறுமுகம் - elections news

பொள்ளாச்சி: தமிழர் நலன் பாதுகாக்க தமிழ் சமுதாயம், தமிழ்நாடு விவசாயத்தைப் பாதுகாக்க மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்குத் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் வெற்றி பெறவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

CPI கட்சி ஆறுமுகம் பேட்டி
CPI கட்சி ஆறுமுகம் பேட்டி
author img

By

Published : Mar 18, 2021, 2:46 PM IST

மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் சார்பாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வால்பாறை சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் ஆறுமுகம், திமுக கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், ஒன்றியப்பொறுப்பாளர் கன்னிமுத்து, கூட்டணிக் கட்சியான காங்கிரஸ், மதிமுக நிர்வாகிகள் ஆகியோர் ஆனைமலை வட்டாட்சியர் அலுவலகத்தில், வால்பாறை சட்டப்பேரவைத் தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலரிடத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதுகுறித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஆறுமுகம் செய்தியாளரிடம் கூறுகையில், 'பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் விலை ஏற்றம், வேலையில்லாத் திண்டாட்டம், மொழிவாரியாக மக்களைப் பிரிப்பது, சிறுபான்மையினரை மதத்தின் பெயரால் குடியுரிமை திருத்தச் சட்டத்தை வைத்து பிரித்து ஆள்வது போன்ற செயல்களை செய்து வருகிறது’ என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஆறுமுகம் பேட்டி

இதேபோன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களைப் பெரிதும் பாதிப்பதாகவும்; விவசாயத்தைப் பாதுகாக்க மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணித் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான 234 வேட்பாளர்களும் வெற்றி பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: 'கமல் ஒரு அரை வேக்காடு' - செந்தில் பாலாஜி தாக்கு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.