ETV Bharat / state

வழிகாட்டு நெறிமுறையின்றி பிரதமர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்! - மோடி 70ஆவது பிறந்தநாள்

கோவை: பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாவட்ட பாஜகவினர் முகக் கவசங்களின்றி, தகுந்த இடைவெளியின்றி எவ்வித வழிகாட்டு நெறிமுறைகளையும் கடைப்பிடிக்காமல் கோயிலில் வழிபாடு நடத்தினர்.

covai bjp members celebrate modi birthday without maintaining corona guidelines

author img

By

Published : Sep 16, 2020, 8:16 PM IST

பிரதமர் நரேந்திர மோடி நாளை (செப். 17) தனது 70ஆவது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். இதனை முன்னிட்டு கோவை மாவட்ட ரெயின்போ காலனி பாஜகவினர் 70 கிலோ எடையுள்ள லட்டை தயாரித்து கோயிலில் வழிபட முடிவு செய்தனர். இதற்காக ரெயின்போ காலனி பகுதியில் உள்ள சிவன் காமாட்சி அம்மன் கோயிலுக்கு 70 கிலோ எடை உள்ள லட்டை மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்துவந்தனர்.

மேலும், பிரதமர் மோடி பூரண நலமுடன் இந்த நாட்டை ஆள வேண்டுமென வேண்டி தயாரித்த 70 கிலோ எடையுள்ள லட்டை கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர்.

வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் பாஜகவினர் கோயிலில் வழிபாடு

ஆனால், இந்த நிகழ்வில் கலந்துகொண்ட எவரும் முகக்கவசம், தகுந்த இடைவெளி உள்ளிட்ட மத்திய சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காமல், நோய்த்தொற்று பரப்பும் வகையில் இருந்துள்ளதாக பலர் குற்றம் சாட்டினர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.