கடந்த மார்ச் 25ஆம் தேதி கோவை பன்னிமடைப்பகுதியில் காணமால் போன சிறுமி மார்ச் 26ஆம் தேதி அவரது வீட்டின் அருகே சடலமாக மீட்கப்பட்டார். சிறுமியின் சடலத்தை உடற்கூறாய்வு செய்ததில், சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இச்சம்பவம் தொடர்பாக பல்வேறு நபர்களிடம் காவலர்கள் விசாரணை நடத்தினர். அதில், சந்தோஷ்குமார் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தது தெரியவந்தது. இதன்பின்பு சந்தோஷ்குமார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இவ்வழக்கின் விசாரணை கோவையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இன்று, சந்தோஷ் குமாரின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு அவர் குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும், தண்டனை குறித்த விவரங்கள் பிற்பகல் தெரிவிக்கப்படும் என்று நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மத்திய அரசுக்காக மோட்டார் சைக்கிள் பேரணி - அர்ஜுன் சம்பத் அறிவிப்பு!