கோயம்புத்தூரில் கரோனா தொற்று பரவல் அதிகளவில் உள்ளது. மாவட்டத்தில் தொற்று பாதிப்பு, இறப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையிலுள்ள பிணவறையில் கரோனா மற்றும் பிற நோய்கள், விபத்துகளால் இறந்தவர்களின் உடல்கள் தேக்கி வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தநிலையில் அங்குள்ள பிணவறை நடைபாதையில் உயிரிழந்தவர்களின் உடல் வைக்கப்பட்ட இரண்டு புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்களின் உடலை பாதுகாப்பாக வைக்க குளிர்சாதன வசதி கொண்ட அறைகளை ஏற்படுத்தி தர வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. மின் தகன மையங்களில் எரியூட்டப்படும் சடலங்களின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளதால் கால தாமதம் ஏற்படுகிறது.
பிணவறை நடைபாதையில் சடலங்கள் வைக்கப்பட்ட சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.