கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தொடர் காய்ச்சல், சளி இருந்தால் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் கரோனா தடுப்பு மையத்தின் 04259 224855 என்ற எண்ணிற்கு தொடர்புகொள்ளலாம்.
பெயர்,முகவரி, தொலைபேசி எண் அளித்தால் செவிலியர், லேப் டெக்னீசியன் வாகனத்தில் வந்து நேரடியாக கரோனா பரிசோதனை செய்யப்பட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என உதவி ஆட்சியர் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.