கரோனா தொற்று இரண்டாவது அலை காரணமாக புதிய கட்டுப்பாடுகளைத் தமிழ்நாடு அரசு நேற்று (ஏப்.18) அறிவித்தது. இந்நிலையில் கோவையில் உள்ள வடமாநிலத் தொழிலாளர்கள் ஊரடங்கு அச்சம் காரணமாக வெளியேறத் தொடங்கியுள்ளனர்.
வடமாநிலத் தொழிலாளர்கள் வெளியூர்களுக்குச் செல்வதைத் தடுத்து நிறுத்த தொழில் துறையினர் பல்வேறு முயற்சியினை மேற்கொண்டுவருகின்றனர். வெளி மாநிலத் தொழிலாளர்களுக்குத் தேவையான வசதிகளையும், தடுப்பூசிகளையும் போடும் நடவடிக்கைகளில் தொழில் துறையினர் ஈடுபட்டு அவர்களைத் தக்கவைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு காரணமாக இன்று (ஏப். 19) கோவையிலிருந்து வட மாநிலங்களுக்குச் செல்லும் தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
இன்று பிற்பகல் கோவையிலிருந்து வடமாநிலத்திற்குச் செல்லும் ரயில்களில் ஏராளமான தொழிலாளர்கள் கிளம்பிச் சென்றனர். சொந்த ஊருக்கு செல்வதற்கு ஏராளமான தொழிலாளர்கள் இன்று முன்பதிவும் செய்தனர்.
இதையும் படிங்க: இரவு ஊரடங்கு எதிரொலி: பகலில் வெளி மாவட்ட பேருந்துகள் இயக்கம்