ETV Bharat / state

ஒரே காவல் நிலையத்தில் 7 பேருக்கு கரோனா உறுதி!

author img

By

Published : May 9, 2021, 3:55 PM IST

கோயம்புத்தூர்: செல்வபுரம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் உட்பட 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

corona news
ஒரே காவல் நிலையத்தில் 7 பேருக்கு கரோனா உறுதி

தமிழ்நாட்டில் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கோயம்புத்தூர் செல்வபுரம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் உட்பட அங்கு பணிபுரியும் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து காவல் நிலையம், கிருமி நாசினி கொண்டு தூய்மை செய்யப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் செய்திகள்
காவல் நிலையம் தற்காலிகமாக எதிர்புறம் உள்ள தனியார் மண்டபத்தில் செயல்பட்டு வருகிறது

மேலும் காவல் நிலையம் தற்காலிகமாக எதிர்ப்புறம் உள்ள தனியார் மண்டபத்தில் செயல்பட்டு வருகிறது. இது தொடர்ந்து புகார் அளிக்க வரும் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், கிருமி நாசினிகளை பயன்படுத்த வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று காவல் துறையினர் வேண்டுகோள் விடுத்தனர். ஒரே காவல் நிலையத்தைச் சேர்ந்த 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யபட்டது, அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஒரே நாளில் 4 லட்சம் பேர் பாதிப்பு; 4,092 பேர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.