ETV Bharat / state

பொதுமக்களிடம் கரோனா குறித்து விழிப்புணர்வு பாடல் பாடும் காவல் உதவி ஆய்வாளர் - கரோனா குறித்து விழிப்புணர்வு பாடல்

கோயம்புத்தூர்: பொள்ளாச்சியில் கிராம மக்களுக்கு கரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக காவல் உதவி ஆய்வாளர் கடந்த 45 நாள்களுக்கு மேலாக பாடல்கள் பாடி வருகிறார்.

police
police
author img

By

Published : May 14, 2020, 10:55 AM IST

நாடு முழுவதும் கோவிட்-19 எனும் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் தேசிய ஊரடங்கு உத்தரவு மார்ச் இறுதி வாரம் முதல் தற்போதுவரை அமலில் இருந்து வருகிறது.

கரோனா தொற்றை தடுக்கும் பணியில் மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள் என பலதரப்பட்ட அரசு ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் மாவாட்டம் பொள்ளாச்சி அடுத்த கோமங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல் துறை உதவி ஆய்வாளர் மணிமாறன் கோமங்கலம், சிஞ்சுவாடி, தேவனூர்புதூர், கஞ்சம்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் மத்தியில் கரோனா குறித்த விழிப்புணர்வு பாடல்களை கடந்த 45 நாள்களுக்கும் மேலாக பாடி வருகிறார்.

அதுமட்டுமல்லாது கரோனா பாதிப்பு குறித்தும் அதன் விளைவுகள் குறித்தும் தனிமனித விலகலின் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு பரப்புரையும் மேற்கொண்டு வருகிறார். சினிமா பாடல்களை கரோனா விழிப்புணர்வு பாடல்களாக மாற்றி அதற்கு அவர் டப்பிங் செய்தவாறு கிராமங்களில் வலம் வருவது அங்கிருப்பவர்களை வெகுவாக ஈர்த்தது.

விழிப்புணர்வு பாடல் பாடிவரும் காவல் உதவி ஆய்வாளர்

கரோனாவிற்கு எதிரான யுத்தத்தில் ஏதாவது ஒரு விதத்தில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே தன்னுடைய நோக்கமாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நடிகர் மோகன்லால் அளித்த முகக்கவசம் அமைச்சர் வேலுமணி கைகளில்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.