ETV Bharat / state

'அதிமுகவினர் மீது தொடர்ந்து பதியப்படும் பொய் வழக்குகள்' - அதிமுக மீது தொடர்ந்து பொய் வழக்குகள் பதிவு

திமுக உத்தரவின்படி கோவை மாவட்ட அதிமுகவினர் மீது காவல் துறையினர் தொடர்ந்து பொய் வழக்குகளைப் போடுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.

எஸ்.பி.வேலுமணி பேட்டி
எஸ்.பி.வேலுமணி பேட்டி
author img

By

Published : Dec 23, 2021, 5:03 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு அருகே கோதவாடி குளத்தைப் பார்வையிடச் சென்ற அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர் மீது காலணி வீசப்பட்டது.

கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின்பேரில் பொள்ளாச்சி சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயராமன் உள்பட 40 பேர் மீது கிணத்துக்கடவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

எஸ்.பி. வேலுமணி பேட்டி

மேற்கு மண்டல காவல் துறைத் தலைவர் சுதாகரிடம் அதிமுக முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான எஸ்.பி. வேலுமணி தலைமையில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கந்தசாமி, அம்மன் அர்ஜுனன் உள்ளிட்டோர் மனு அளித்தனர்.

அந்த மனுவில், "காலணி வீசியும், கற்களைக் கொண்டு தாக்கியும் சட்டப்பேரவை உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமனைப் பணி செய்யவிடாமல் தடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பொள்ளாச்சி ஜெயராமன் மீது போடப்பட்ட வழக்கை ரத்துசெய்ய வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய எஸ்.பி. வேலுமணி, "எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருக்கும்போது கோதவாடி குளம் தூர்வாரப்பட்டது. தற்போது குளத்தில் நீர் வந்திருப்பதால் பொதுமக்கள் பொங்கல் வைத்து கொண்டாடிய நிகழ்வில் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்துகொண்டார். அப்போது அவர் மீது அரசு பொறுப்பில் இல்லாத திமுகவினர் தகாத சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்ட அதிமுகவினர் மீது தொடர்ந்து திமுக உத்தரவின்படி காவல் துறையினர் பொய் வழக்குப் போட்டுவருகின்றனர்" என்றார். அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு காவல் துறையினர் லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்திருப்பது குறித்த கேள்விக்கு எஸ்.பி. வேலுமணி பதில் அளிக்காமல் கிளம்பிச் சென்றார்.

இதையும் படிங்க: கருணாநிதியின் நெருங்கிய நண்பர் கவுண்டம்பட்டி முத்து காலமானார்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.