ETV Bharat / state

மோதலைத் தூண்டியதாகப் புகார்: நாம் தமிழர் நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் மீது வழக்குப்பதிவு!

இந்திய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாக, நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறைச் செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Idumbavanam Karthik
இடும்பாவனம் கார்த்திக்
author img

By

Published : Apr 27, 2023, 3:53 PM IST

கோவை: உக்கடம் பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் தேதி எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் கலந்து கொண்டு பேசினார். அவரது பேச்சு இரு தரப்பினருக்கும் இடையே மோதலைத் தூண்டும் வகையில் இருந்ததாக புகார்கள் எழுந்தன.

இந்நிலையில் அவர் தேச நல்லிணக்கம் மற்றும் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாக உக்கடம் காவல் நிலையத்தில், இரண்டு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதாவது, 153(A)(I)(a) என்ற பிரிவின் கீழும், 505(ii) என்ற பிரிவின் கீழும் உக்கடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள இடும்பாவனம் கார்த்திக், "இருபிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக பேசியதாகக் கூறி, என் மீது கோவை உக்கடத்தில் இரு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுத்திருக்கிறது திமுக அரசு. நான் பேசியது பாபர் மசூதி இடிப்பைக் கண்டித்து; முழுக்க முழுக்க பாஜகவை. பாஜகவை பற்றி பேசினால் திமுகவுக்கு ஏன் வலிக்கிறது?'' என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க: திருமணத்தை மீறிய உறவுக்குத் தடையாக இருந்த நண்பரை கொலை செய்து நாடகமாடிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.