கோவை அரசு மருத்துவமனையை ஆட்சியர் ஆய்வு! - Coimbatore latest news
கோவை: தலைமை அரசு மருத்துவமனையை மாவட்ட ஆட்சியர் ராசாமணி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
கோவை தலைமை அரசு மருத்துவமனை சென்ற மாவட்ட ஆட்சியர் ராசாமணி, அங்குள்ள சிறுநீரக இரத்த சுத்திகரிப்பு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் உள்ள வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள நோயாளிகள், புறநோயாளிகளை பார்க்க வந்தவர்களிடம் மருத்துவமனையின் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
அவரிடம் சில நோயாளிகள், பார்வையாளர்கள் மருத்துவமனையில் கழிப்பிட வசதி, அமர்வு வசதிகள், குடிநீர் வசிதிகள் உள்ளிட்ட வசதிகள் முழுவதும் செயல்படவில்லை எனத் தெரிவித்ததற்கு, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர், "இந்த ஆய்வானது கோவை அரசு மருத்துவமனை எப்படி இருக்கிறது. மருத்துவமனையில் என்னென்ன தேவைகள் உள்ளன. நோயாளிகள், பார்வையாளர்கள் ஏதேனும் குறைகளையோ தேவைகளையோ கூறிகிறார்களா? என அறிவதற்கு நடத்தப்பட்டது ஆகும்.
இங்கு பிரதான பிரச்னையான மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறைக்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. தமிழ்நாடு அரசு, கோவை அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்ய ரூ.124 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது, கூடிய விரைவில் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படும்" என்றார். ஆய்வில் மருத்துவமனை முதல்வர் அசோகன், கண்காணிப்பாளர் சடகோபன் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: உயர் கோபுர மின்விளக்கு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு!
கோவை அரசு மருத்துவமனையை மாவட்ட ஆட்சியர் திரு ராசாமணி நேரில் சென்று அங்குள்ள சிறுநீரக பிரிவு, இரத்த சுத்திகரிப்பு பிரிவு, போன்ற அனைத்து பிரிவிலும் வசிதிகள், போன்றவற்றை பார்வையிட்டார். மேலும் அங்குள்ள நோயாளிகள் மற்றும் நோயாளிகளை பார்க்க வந்தவர்களிடம் மருத்துவ வசதிகள் அடிப்படை வசதிகள் போன்றவற்றை குறித்து கேட்டறிந்தார். அதில் சில நோயாளிகள், மற்றும் பார்வையாளர்கள் மருத்துவமனையில் கழிப்பிட வசதி, அமருவதற்கான வசதிகள், குடிநீர் வசிதிகள் செய்து தரும்படி கேட்டனர்.
பின்னர் பேசிய மாவட்ட ஆட்சியர் ராசாமணி இந்த ஆய்வானது கோவை அரசு மருத்துவமனை எப்படி இருக்கிறது, இதில் என்னென்ன தேவைகள் உள்ளன நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள் ஏதேனும் குறைகளையோ தேவைகளையோ கூறிகிறார்களா என்று அறிவதற்கு நடத்தப்பட்டது என்றும் இங்கு கேட்டறிந்த வகையில் மருத்துவம் நன்றாக உள்ளதாகவும் வசதிகள் கழிவறை, குடிநீர் வசதிகள் மேலும் வேண்டும் என்றும் நோயாளிகள் பார்வையாளர்கள் கூறி உள்ளனர் அதை விரைவாக செய்து தரப்படும் என்றும் கூறினார். அதுமட்டும் அல்லாமல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குறைவாக உள்ளதால் அதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். தமிழக அரசு கோவை மக்கள் அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்ய 124 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது என்றும் அது கூடிய விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
ஆய்வின் போது மருத்துவமனை முதல்வர் அசோகன் மற்றும் கண்காணிப்பாளர் சடகோபன் உடனிருந்தனர்.Conclusion: