கோவை மாவட்டம் ஆனைகட்டி கண்டி வழி மலை கிராமத்தில் கடந்த 8ஆம் தேதி பெய்த கன மழையால் இருபது வீடுகள் சேதமடைந்தது. இதனையடுத்து அங்கிருந்த மக்கள் கொண்டனூர் அரசுப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில், இன்றைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கு.ராசாமணி, மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளைப் பார்த்து அவ்வீடுகளை புதிதாகக் கட்ட அதிகாரிகளுக்கு உத்திரவிட்டார்.
கன மழையால் வீடுகள் சேதமடைந்த 20 குடும்பங்களுக்கு தலா 4,100 ரூபாய் வீதம் வெள்ள நிவாரண நிதியாக 82,000 ரூபாய் வழங்கினார். மேலும், அப்பகுதியில் பாரதப்பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு அங்கு வசிக்காமல் இருப்பவர்களை உடனடியாக குடியிருக்க உத்திரவிட்டார்.