ETV Bharat / state

கோவை இளைஞர்கள் புவி வெப்பமயமாதல் குறித்து விழிப்புணர்வு - Youth cycling with seed balls

புவி வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 3 நாடுகளுக்கு சைக்கிளில் கோவை இளைஞர்கள் சுற்றுப்பயணம் செல்ல உள்ளனர்.

கோவை இளைஞர்கள் புவி வெப்பமயமாதல் குறித்து விழிப்புணர்வு

author img

By

Published : Sep 2, 2022, 5:45 PM IST

கோவை அருகே பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச்சேர்ந்தவர் சத்யா. இவரும் இவரது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டத்தைச்சேர்ந்த சிவா, சரண் உள்ளிட்ட மூவரும் புவி வெப்பமயமாதலைத்தடுக்கும் வகையில் மரக்கன்றுகளை நட வலியுறுத்தி சைக்கிள் பயணத்தை இன்று வீரபாண்டி பிரிவில் தொடங்கியுள்ளனர்.

தற்போதைய சூழலில் இளைஞர்களின் வாழ்க்கை முறை மாறி வரும் நிலையில், இம்மூன்று இளைஞர்களும் இணைந்து மரக்கன்றுகளை நட வலியுறுத்தி விதைப்பந்துகளுடன், தங்களது சைக்கிள் பயணத்தை வீரபாண்டிப்பிரிவில் இருந்து தொடங்கி அன்னூர் வழியாகச்சென்றனர். இவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் தங்களது பாராட்டுகளைத்தெரிவித்தனர்.

தொடர்ந்து சத்தியமங்கலம் வழியாக மரக்கன்றுகளை நட வலியுறுத்தி, இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் நேபாளம், பூடான் உள்ளிட்ட 3 நாடுகளுக்கும் செல்ல உள்ளனர்.

கோவை இளைஞர்கள் புவி வெப்பமயமாதல் குறித்து விழிப்புணர்வு

இதுகுறித்து சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ள சரண் கூறுகையில், 'புவி வெப்பமயமாதலைத் தடுக்கும் வகையில் மரக்கன்றுகளை நட வலியுறுத்தி இந்தப் பயணத்தை தொடர்ந்துள்ளதாகவும்; செல்லும் வழியில் நடுவதற்காக விதைப்பந்துகளை எடுத்துச்செல்வதாகவும், இப்பயணம் முடிவடைய குறைந்தது 3 முதல் 4 மாதங்களாகும்’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கடும் பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.