ETV Bharat / state

நவீன வசதிகள் மூலம் பணம் திரட்டி ஆதரவற்றோருக்கு உணவளிக்கும் கோவை இளைஞர்கள்! - ஆதரவற்றோருக்கு உதவி

கோயம்புத்தூர்: கல்லூரியில் ஒன்றாக படித்த இளைஞர்கள் Google Pay, Paytm, Phone pe, போன்ற நவீன வசதிகள் மூலம் பணம் திரட்டி சாலையோரம் வசிக்கும் ஆதரவற்ற மக்களுக்கு உணவளிப்பது பலரது ஆதரவை பெற்றுள்ளது.

நவீன வசதிகள் மூலம் பணம் திரட்டி ஆதரவற்றோருக்கு உணவளிக்கும் கோவை இளைஞர்கள்!

author img

By

Published : May 13, 2021, 3:06 PM IST

கரோனா ஊரடங்கினால் பலரது வாழ்வாதாரம் முடங்கிய நிலையில் சாலையோரம் ஆதரவற்றோரின் நிலை காண்போரை வருத்தத்திற்குள்ளாக்குகிறது. அவர்களுக்குத் தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள், நிறுவனங்கள் போன்றோர் உணவளித்து வருகின்றனர். இந்நிலையில் கோவையில் கல்லூரி முடித்த இளைஞர்கள் தற்போதுள்ள ’பேடிஎம், ஃபோன்பே, கூகுள் பே, யுபிஐ ஐடி’ (Paytm, Phone pe, Google pay, UPI Id) போன்ற நவீன வசதிகளைப் பயன்படுத்தி நிதி திரட்டி சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோருக்கு உணவு, தண்ணீர் பாட்டில், முகக்கவசம் ஆகியவற்றை வழங்கி வருகின்றனர்.

ஒரு நபருக்கு ஒரு வேலை உணவு, குடிநீர் பாட்டில், முகக்கவசத்திற்கு ரூ 33 என்ற வீதம் கொடுத்து வருகின்றனர். ஊடரங்கு பிறப்பித்த 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதிவரை இதனைத் தொடர்ந்து செய்வோம் என்ற இவர்களது முயற்சிக்கு பெரும் ஆதரவும் பாராட்டுதலும் கிடைத்துள்ளது. தற்போது ஒரு நாளுக்கு ஒரு வேளை உணவளிக்க மட்டுமே பணம் சேரும் நிலையில் மேலும் தொகை கிடைத்தால் பேருதவியாக இருக்கும் என்றும் மூன்று வேளைகள்கூட உணவளிக்கத் தயாராக இருக்கின்றோம் என்றும் கூறியுள்ளனர். அதே சமயம் தங்களுக்கு உதவி செய்ய ஆட்கள் தேவைப்படுவதாகவும் யாரேனும் இருந்தால் தங்களைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

தொடர்பு எண்: 8270141203 (முஸ்தஃபா- New Aquarist and Pets shop)

பணமளிக்க விரும்புவோர்,

Google pay, Paytm, Phone pe- 8270141203

UPI Id- 8270141203@paytm

இதன் மூலம் பணமளித்து உதவலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

கல்லூரி படிப்பை முடித்தும் ஒன்றாக இணைந்து இந்த முயற்சியை கையில் எடுத்திருப்பது பொதுமக்களிடையேயும் சமூக செயற்பாட்டாளர்கள் இடையேயும் பாராட்டை பெற்றுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.