ETV Bharat / state

முதலமைச்சர் குறித்து அவதூறு பதிவு - கோவை இளைஞர் அதிரடி கைது!

கோவை: தமிழ்நாடு முதலமைச்சர் குறித்து சமூகவலைதளங்களில் அவதூறாகப் பதிவிட்டதாக குனியாமுத்தூர் இளைஞர் ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Coimbatore youngster
கோவை இளைஞர்
author img

By

Published : Jan 3, 2020, 7:44 PM IST

Updated : Jan 3, 2020, 7:52 PM IST

கோவை கரும்புக்கடை சேரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிராஜ் தீன். இவர் சமூக வலைதளங்களில் தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர்கள், மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களை ஆபாசமாகவும், தரக்குறைவான முறையிலும் செய்திகளைப் பரப்புவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, குனியமுத்தூர் காவல் துறை வழக்குப்பதிவு செய்து, அவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், இவர் பல காலங்களாக வேண்டுமென்றே அவதூறு பரப்பியது தெரியவந்தது. இவர் தமிழ்நாடு மக்கள் ஜனநாயகக் கட்சியின் கோவை மத்திய மண்டலச் செயலாளர் என்பதும் தெரியவந்தது.

இவர் மீது ஏற்கனவே, பெட்ரோல் பங்கில் தகராறு செய்தது, கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகள் போத்தனூர் காவல் நிலையத்தில் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் காவல் துறை கைது செய்த சிராஜ் தீனை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: தெரு நாய்கள் - தன்னார்வலர்களுக்கு மாநகராட்சி வேண்டுகோள்!

Intro:தமிழக முதல்வர் பற்றி அவதூறான கருத்துக்களை சமூக வலைதளங்களை பரப்பிய கோவை வாலிபரை குனியமுத்தூர் போலீஸார் கைது செய்தனர்...
Body:கோவை கரும்புக்கடை சேரன் நகர் பகுதியை சேர்ந்த சேர்ந்த சிராஜுதீன் என்பவர் சமூக ஊடகம் மூலம் தமிழக முதல்வர்கள், மற்றும் அமைச்சர்களையும், மறைந்த முன்னால் முதல்வர்கள் எம்,ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களை ஆபாசமாகவும், தரக்குறைவான முறையிலும் செய்திகளை பரப்புவதாக வந்த தகவல்களை அடுத்து குனியமுத்தூர் போலிசார் வழக்கு பதிவு செய்து, சிராஜ்தீனை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் வேண்டுமென்றே அவதூறு பரப்பியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் இளைஞரை கைது செய்தனர். விசாரணையில் அவர் தமிழ்நாடு மக்கள் ஜனநாயக கட்சி கோவை மத்திய மண்டல செயலாளர் என்பது தெரியவந்தது., மேலும் இவரது முகநூல் பக்கத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஏராளமான பதிவுகள் செய்துள்ளதை போலிசார் உறுதிசெய்துள்ளனர். மேலும் கோவை சுந்திராபுரம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் தகராறு செய்தது, மற்றும் கொலைமிரட்டல் உள்ளிட்ட வழக்குகள் போத்தனூர் காவல் நிலையத்தில் உள்ளது என்பது தெரியவந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட சிராஜ்தீனை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.Conclusion:
Last Updated : Jan 3, 2020, 7:52 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.