ETV Bharat / state

டிச.30 முதல் கோவை டூ பெங்களுரூவுக்கு வந்தே பாரத் ரயில்.. அதிகாலையில் பூஜையுடன் தொடங்கிய சோதனை ஓட்டம்!

Coimbatore to Bengaluru Vande Bharat train: கோவையில் இருந்து பெங்களூருக்கு இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் இன்று நடைபெறுகிறது.

பொதுமக்கள் பயன்பாட்டிற்கு எப்போது
கோவையில் இருந்து பெங்களுக்கு வந்தே பாரத் சோதனை ஓட்டம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 27, 2023, 2:43 PM IST

கோவையில் இருந்து பெங்களுக்கு வந்தே பாரத் சோதனை ஓட்டம்

கோயம்புத்தூர்: கோவை-பெங்களுரூ இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை வரும் டிச.30 ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைக்க உள்ளார். இந்நிலையில் இதற்கான சோதனை ஓட்டத்தை இன்று ரயில்வே அதிகாரிகள் கற்பூரம் காட்டி பூசணிக்காய் உடைத்து துவக்கி வைத்தனர்.

நாடு முழுவதும் பொதுமக்களின் பயணத்தை எளிமையாக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை 35 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தற்பொது மேலும் ஒரு வந்தே பாரத் ரயில் சேவை வரும் 30ம் தேதி துவக்கப்பட உள்ளது.

இந்த புதிய சேவை கோவையில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களுரூவிற்கு இயக்கப்பட உள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைக்க இருக்கின்றார். இந்நிலையில் இதற்கான சோதனை ஓட்டமானது இன்று காலை 5 மணி அளவில் தொடங்கியது.

கோவை ரயில் நிலையத்தில் கற்பூரம் காட்டி பூசணிக்காய் உடைத்து இந்த சோதனை ஓட்டத்தை ரயில்வே அதிகாரிகள் துவக்கி வைத்தனர். கோவை ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 5 மணிக்கு கிளம்பிய சோதனை ஓட்ட ரயில் 11.30 மணி அளவில் பெங்களூரு செல்லும் வகையில் திட்டமிடப்பட்டது

இதையும் படிங்க: உயிருக்குப் போராடிய காட்டெருமை.. உயிர் பிழைக்க ஓட்டம் பிடித்த வனத்துறையினர்.. தென்காசியில் நடந்த பதைபதைக்கும் சம்பவம்..!

பின்னர் பிற்பகல் 1.40 மணிக்கு பெங்களுரூவில் இருந்து கிளம்பும் சோதனை ஓட்ட ரயில் 8 மணி அளவில் கோவை திரும்ப உள்ளது. கோவையில் இருந்து 8 பெட்டிகளுடன் கிளம்பும் இந்த வந்தே பாரத் ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, ஓசூர் வழியாக பெங்களூருவிற்கு 6 மணி நேரம் 30 நிமிடங்களில் சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ரயிலில் ஏ.சி சேர் கார் வகுப்பில் பயணம் செய்ய 1,000 ரூபாயும், எக்ஸிகியூட்டிவ் சேர் காரில் பயணம் செய்ய 1,850 ரூபாயும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் கட்டணம் குறித்து அதிகார்வபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. மேலும் இதில் பயணம் செய்வதற்கான முன்பதிவுகள் வரும் டிச.30, 31 ஆகிய தேதிகளில் நடைபெறும் என எதிர்பார்க்கபடுகிறது.

இதையும் படிங்க: வண்டியூரில் மேம்பாலம் கட்ட தடை கோரிய வழக்கு: தலைமை நீதிபதி முன் பட்டியலிட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.