கரோனா பரவலை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது பகுதியிலுள்ள மனுக்களை அந்தந்த கிராம பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் , கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி துணை ஆட்சியர் அலுவலகத்தில் துணை ஆட்சியர் வைத்தியநாதன் தலைமையில் கிணத்துக்கடவு தாலுகா பகுதியிலுள்ள வருவாய் துறை அலுவலர்களுடன் ஆலோசனைகூட்டம் நடைபெற்றது .
இதில் இதுவரை பொதுமக்களிடமிருந்து எத்தனை மனுக்கள் பெறப்பட்டுள்ளன, அந்த மனுக்களின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை கேட்டறிந்தார் .
பின்னர் வாரந்தோறும் நடைபெறும் குறைதீர்ப்பு முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது வருவாய் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இந்த கூட்டத்தில் கிணத்துக்கடவு வட்டாட்சியர் ஸ்ரீதேவி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.