ETV Bharat / state

கோவையில் பயங்கரவாத தாக்குதலா..! ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர் மீதான விசாரணையை என்ஐஏ-வுக்கு மாற்ற வானதி சீனிவாசன் வலியுறுத்தல்! - சிறையில் வார்டனுக்கு மிரட்டல்

MLA Vanathi Srinivasan: ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவாளர் ஆசிப் முஸ்தஹீன் மீதான விசாரணையைத் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்ற வேண்டும் எனக் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ-வும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Coimbatore South MLA Vanathi Srinivasan urges NIA to transfer ISIS sympathiser Asif Mustaheen investigation
ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர் விசாரணையை என்ஐஏவுக்கு மாற்ற கோரிக்கை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 15, 2023, 4:31 PM IST

கோயம்புத்தூர்: ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் ஆதரவாளரான ஆசிப் முஸ்தஹீன் உபா (Unlawful Activities (Prevention) Act - UAPA) சட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரிடம் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் கொடி வரையப்பட்டிருந்த பேப்பரை சிறை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும், அவர் சிறை அதிகாரிகளை மிரட்டியதாக ஜெயிலர் சிவராஜன் கொடுத்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், அவர் மீதான விசாரணையைத் தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்ற வேண்டுமென, கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும் பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து வானதி சீனிவாசன் அவரது X சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  • கோவை மாநகரம் தொடர் குண்டுவெடிப்பு, கலவரங்கள் என, 25 ஆண்டுகளுக்கு மேலாக பயங்கரவாதிகளின் இலக்காக இருந்துவருகிறது. தற்போது கோவை மத்திய சிறைச்சாலையில் இருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவாளர் ஆசிப் முஸ்தஹீன், சிறையிலிருந்து வெளியேறுவேன், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிற்காக தீவிரவாத வேலைகளை தொடர்வேன்… pic.twitter.com/qN10ZL277E

    — Vanathi Srinivasan (@VanathiBJP) December 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அந்த பதிவில், "கோயம்புத்தூர் மாநகரம் தொடர் குண்டுவெடிப்பு, கலவரங்கள் என 25 ஆண்டுகளுக்கு மேலாகப் பயங்கரவாதிகளின் இலக்காக இருந்துவருகிறது. தற்போது கோவை மத்திய சிறைச்சாலையில் இருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவாளர் ஆசிப் முஸ்தஹீன், சிறையிலிருந்து வெளியேறுவேன். ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிற்காகத் தீவிரவாத வேலைகளைத் தொடர்வேன். அப்போது நீங்களும் இருக்க மாட்டீர்கள், சிறைச்சாலையும் இருக்காது என மிரட்டல் விடுத்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கின்றது.

ஏற்கனவே, 1998ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு, 2022ஆம் ஆண்டு நடைபெற்ற சிலிண்டர் குண்டுவெடிப்பு எனப் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து கோவை மீண்டு வருவதற்குள், கடந்த டிசம்பர் 1ஆம் தேதி கோவைக்குக் கொண்டுவரப்பட்ட 2 ஆயிரத்து 953 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் என்ற செய்திகள் வெளியான பதட்டம் தணிவதற்குள், தற்போது ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவாளர் கோவை மத்திய சிறைச்சாலையில் தீவிரவாத தாக்குதல் நடத்துவோம் என மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும்.

காலம் தாழ்த்தாமல் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவாளர் ஆசிப் முஸ்தஹீன் மீதான விசாரணையைத் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றவேண்டும். அப்போதுதான் முழு உண்மைகளும் விரைவாக வெளிவரும்! தொழில் நகரமாம் கோவை இன்னொரு பயங்கரவாத தாக்குதலைத் தாங்காது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் விவகாரம்; மூளையாக செயல்பட்ட நபர் கைது.. டெல்லி காவல்துறையின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.