ETV Bharat / state

மனு கொடுக்க செல்லும் முன்பே கைது செய்ய ஆயத்தமான காவல் துறை - Coimbatore South DMK District Officer

அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற திமுகவின் தேர்தல் கூட்டங்களுக்கு காவல் துறையினர் ஏற்படுத்திவரும் இடையூறுகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க சென்ற கோவை தெற்கு திமுக மாவட்ட பொறுப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Coimbatore South DMK District Officer Thenral Selvaraj arrested

author img

By

Published : Dec 29, 2020, 3:02 PM IST

கோவை: அதிமுகவின் அராஜக செயலை கண்டித்தும், ”அதிமுகவை நிராகரிக்கிறோம்" என்ற திமுகவின் கூட்டங்களுக்கும் காவல் துறையினர் ஏற்படுத்திவரும் இடையூறுகள் குறித்து கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.

இதன்காரணமாக காலை 6 மணி முதலே, அவரது வீடு உள்ள குமரன் நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும், அவர் கோவை செல்லக்கூடாது எனவும் காவலர்கள் தென்றல் செல்வராஜிடம் அறிவுறுத்தினர்.

இருப்பினும், திட்டமிட்டபடி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வீட்டிலிருந்து ஆதரவாளர்களுடன் புறப்பட்ட அவரை, வீட்டின் முன்பு தயாராக இருந்த காவலர்கள் கைது செய்து பொள்ளாச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்தனர்.

இதையும் படிங்க: திமுக மாவட்ட பொறுப்பாளர் வீடு முற்றுகை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.