கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் ரமணமுதலிபுதூர் என்ற கிராமம் உள்ளது. அங்கு நாக பிள்ளையார் கோயில் எதிரில் நேற்று இரவு பீகார் மாநிலத்தை சேர்ந்த சிவ்டாட் மான்ஜி சாம்ப்ரான் (31), என்பவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ராமகிருஷ்ணா என்டர்பிரைசஸ் என்ற காலிபாட்டில் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
நேற்று இரவு கம்பெனியில் பணி முடித்தவுடன் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு வருவதாக கூறிச் சென்றவரை அடையாளம் தெரியாத நபர்கள் மரக்கட்டையால் தலையில் அடித்து கொலை செய்துள்ளனர்.
இதையும் படிங்க: திருமாவளவன் பாஜக கூட்டணிக்கு வர வேண்டும் - வானதி சீனிவாசன் அழைப்பு!
இந்தச் சம்பவம் தொடர்பாக வால்பாறை துணை கண்காணிப்பாளர் கீர்த்திவாசன் தலைமையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பீகாரை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: வேளாண்மை, மீன்வளப் படிப்புகளுக்கு ஜூன் 9ம் தேதி வரை விண்ணப்பிக்க ஏற்பாடு!