கோயம்புத்தூர்: கோவை மாநகர காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக இன்று கோவை வடகோவை சந்திப்பில் கோவை மாநகர காவல் துறை சார்பில் பெண்கள் பாதுகாப்பு குறுத்தும், தலைக்கவசம் அணிவது குறித்தான இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பெண் காவலர்கள் மற்றும் தனியார் அமைப்பை சேர்ந்த பெண்கள்கள் கலந்து கொண்டனர். இதனை போக்குவரத்து காவல் துணை ஆணையர் செந்தில்குமார் தொடங்கிவைத்தார்.
இந்த விழிப்புணர்வு பேரணியில் 100க்கும் மேற்பட்ட கோவை மாநகர பெண் காவலர்கள், தனியார் அமைப்பு பெண்கள் கலந்து கொண்டு முகக்கவசம் அணிந்து வாகன பேரணி மேற்கொண்டனர்.
இந்தப் பேரணியானது வடகோவை சிந்தாமணி சந்திப்பில் தொடங்கி ஆர்எஸ் புரம் லாலி ரோடு ஆகிய சந்திப்பு வழியாக அரசினர் தொழில் நுட்ப கல்லூரியை வந்தடைந்தது.
இதையும் படிங்க:புதுச்சேரி-ஹைதராபாத் விமான சேவை மீண்டும் தொடக்கம்!