ETV Bharat / state

'50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை தற்போதுள்ள அரசு செய்துள்ளது' - அமைச்சர் வேலுமணி - minister SP Velumani byte

கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை தற்போதுள்ள அரசு 5 ஆண்டுகளில் செய்துள்ளது என அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார்.

Coimbatore photo exhibition
photo exhibition opens by minister SP Velumani
author img

By

Published : Mar 1, 2020, 10:16 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசின் மூன்றாண்டு சாதனைகளை விளக்கும் விதமாக புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதை ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திறந்துவைத்துப் பார்வையிட்டார்.

photo exhibition opens by minister SP Velumani
புகைப்படக் கண்காட்சியைத் திறந்துவைத்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

இந்தக் கண்காட்சியில் அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகள் அனைத்தும் புகைப்படங்களாக எடுத்து வைக்கப்பட்டுள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட முதலமைச்சர் பழனிசாமி செய்த சாதனைகளும், ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி செய்த நலத்திட்டங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேட்டி

மேலும் இந்த வாரம் முழுவதும் இந்தப் புகைப்படக் கண்காட்சி நடைபெறும். பொதுமக்கள் அனைவரும் வந்து பார்த்துச் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ”கண்காட்சியில் புகைப்படங்கள் மிகவும் குறைவுதான். இன்னும் பல சாதனைகளை அதிமுக செய்துள்ளது. தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை தற்போதுள்ள அரசு 5 ஆண்டுகளில் செய்துள்ளது” என்றும் கூறினார்.

இதையும் படிங்க: ரோஜா வனம் நிகழ்வின் மூலம் குஷ்பூ மூவருக்கு “சவால்“ விடுத்துள்ளார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.