கோயம்புத்தூர்: வெள்ளலூர் பகுதியில் திராவிடர் கழகப் பகுத்தறிவுப் படிப்பகம் முன்பு வைக்கப்பட்டிருந்த பெரியார் சிலையில் நேற்று நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலைக்கு காலணி மாலை அணிவித்தும், காவி பொடி தூவியும் அவமதிப்புச் செய்திருந்தனர்.
அதன் சிசிடிவி காட்சிகள் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து போத்தனூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில் வெள்ளலூர் பகுதியில் திராவிடர் கழகம், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்துகொண்டு அச்சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்தவர்கள் இது போன்று செய்திருப்பதாகவும், இதேபோல தொடர்ந்து பெரியார் சிலைகள் அவமதிக்கப்பட்டுவருவதாகவும் கூறிய அவர்கள், குற்றவாளிகள் மீது காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென முழக்கங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க:முகக்கவசம் அணியாமல் சென்றதாக 3,174 நபர்கள் மீதும் ஊரடங்கை மீறி சுற்றியதாக 1,040 பேர் மீதும் வழக்குப்பதிவு