கோவை மாவட்டத்தில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் குனியமுத்தூர், ஆத்துப்பாலம், போத்தனூர் ஆகியப் பகுதியில் செல்லும் ஆற்றில் நீர் வரத்து அதிகமானது. இதனால் போத்தனூர் - ஜம்ஜம் நகர்ப் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியினுள் நீர் புகுந்தது.
வீட்டுப் பொருட்கள் வெள்ள நீரில் மிதந்தன. மேலும் சாய் நகரில் 5 தெருக்களில் நீர் நிரம்பி காணப்படுகிறது. அதன் பின் மாநகராட்சி அலுவலர்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர். எதிர்பாராத இந்த மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தாலும், குடியிருப்புப் பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
அரசு அலுவலர்கள் மழைநீரைச் சேமிக்க உரிய நடவடிக்கை எடுக்காததே இந்த வெள்ள நீர் குடியிருப்புப் பகுதிகளுக்குள் உட்புகுதலுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:இரண்டு நாட்களாக கனமழை- கோவையில் நீர்வரத்து அதிகரிப்பு!