ETV Bharat / state

ஊட்டியில் விடப்பட்டுள்ள தனியார் மலை ரயிலும்; அதற்கு எழும் கண்டனங்களும்! - Coimbatore district latetst news

தென்னக ரயில்வே அனுமதியளித்த, உதகமண்டல மலை சிறப்பு ரயிலில், குறைந்தபட்ச கட்டணமாக 3ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ooty train ticket price increased
ஊட்டியில் விடப்பட்டுள்ள தனியார் மலை ரயிலும்; அதற்கு எழும் கண்டனங்களும்
author img

By

Published : Dec 7, 2020, 10:27 PM IST

கோவை: தென்னக ரயில்வே உதகமண்டலத்தில் சிறப்பு இரயில் ஒன்றிற்கு அனுமதி அளித்துள்ளது. அந்த ரயிலில், குறைந்த பட்ச கட்டணமாக 3ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக நமது ஈடிவி பாரத் ஊடகத்திடம் பேசிய எஸ்ஆர்எம்யூ(SRMU) கோட்ட செயலாளர் கோவிந்தன், " ஊட்சி மலை ரயில் தனியாருக்கு கொடுத்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. 109 வழித்தடங்களில் 251 ரயில்களை தனியாருக்கு கொடுக்கவேண்டும் என அரசாங்கம் முயற்சித்துவருகிறது. இதன் முதல்கட்டமாக ஊட்டி ரயிலை கொடுத்திருப்பது தெரிகிறது.

இதற்கு முன்பு அந்த ரயில் இயக்கப்பட்டுக்கொண்டிருக்கும்போது அதிகபட்ச கட்டணமே 500ரூபாய்தான் இருந்தது. ஆனால், தற்போது குறைந்த பட்ச கட்டணமாக 3ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மக்களுக்கு மட்டுமல்லாது, வெளிநாட்டு மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஊட்டிக்கு மக்கள் அதிகம் செல்லாத இந்தக் காலத்திலே ரயில் கட்டணம் 3ஆயிரமாக இருக்கும்போது, சீசன் காலங்களில் 8 அல்லது 10ஆயிரம் ரூபாய் வரை உயர்த்துவதற்கான வாய்ப்பை தமிழ்நாடு அரசு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது" என்றார்.

ஊட்டியில் விடப்பட்டுள்ள தனியார் மலை ரயிலும்; அதற்கு எழும் கண்டனங்களும்

இதுதொடர்பாக பேசிய கோவை மக்களவை உறுப்பினர் ஆர். நடராஜன், "தமிழ்நாட்டில் மிக முக்கியமான சுற்றுலா தளமாக இருக்கும் உதகமண்டலத்தின் மலை ரயில் என்பது நூற்றாண்டு காலமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த ரயில் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட மலை ரயில். இதனைப் பயன்பாட்டில் இருந்து நீக்கிவிட்டு அந்த ரயிலை தனியாருக்கு தாரைவார்ப்பது என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

அந்த ரயிலை குத்தகைக்கு எடுத்தவர் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் உள்ள விளம்பரப்பலகையில், தென்னக ரயில்வேயின் முடிவின் அடிப்படையில், ஊட்டி மலை ரயிலின் குறைந்தபட்ச கட்டணம் 3ஆயிரம் ரூபாய், அதிகபட்ச கட்டணம் 12ஆயிரம் ரூபாய் வரை தீர்மாணிக்கப்படும் என குறிப்பிடப்பிட்டுள்ளார்.

தென்னக ரயில்வே ஜனவரி 3ஆம் தேதிவரை மட்டுமே இந்த ரயிலை அனுமதிக்கிறோம் எனக் கூறியிருந்தாலும் விளம்பரப் பலகையில் ஜனவரி 20ஆம் தேதியிலிருந்து தினசரி ரயிலாக செயல்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. வெளிநாட்டு பயணிகளுக்கு மட்டும் மொத்தமாக வாடகைக்கு விடுவது என்ற வகையில் இந்த சிறப்பு ரயிலானது இயக்கப்பட்டு வந்தது. அதேநேரத்தில் பயணிகளின் வசதிகளுக்காக NMR என்ற பயணிகள் ரயிலும் இயக்கப்பட்டது.

தற்பொழுது வைரஸ் தொற்றை காரணமாக வைத்துக்கொண்டு வழக்கமாக இயக்கப்பட்டு வந்த ரயிலை ரத்து செய்துவிட்டு சிறப்பு ரயில் இன்று மிகப்பெரிய அளவில் மக்களை அநியாயப்படுத்தும் நடவடிக்கையில் தென்னக ரயில்வே இறங்கி உள்ளது. இதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். உதகமண்டலத்திற்கு பழைய கட்டணத்திலேயே மீண்டும் ரயிலை இயக்க வேண்டும். ரயில்வே துறையை தனியாருக்கு கொடுப்பது என்பது மிகப்பெரிய ஆபத்தானது என்று மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள்" என்றார்.

இதையும் படிங்க: மலையவே கம்மி ரேட்டுக்கு கொடுக்குறாயிங்க... வடிவேலு பாணியில் சு. வெங்கடேசன் ட்வீட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.