வெளிநாடுகளில் இருந்து நன்கொடை வசூலித்து முறைகேடு செய்தது தொடர்பாக நாடு முழுவதும் 40ற்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர். டெல்லி,மும்பை, ராஜஸ்தான், மைசூர், சென்னை, கோவை, ஈரோடு உள்ளிட்ட இடங்களில் சிபிஐயால் சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம், சேனாதிபாளையம் பகுதியைச் சேர்ந்த வாகாஷ் என்பவரை அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சிபிஐ அலுவலர்கள் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஏராளமான பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து வாகாஷை கோவை சிபிஐ நீதிமன்றத்தில் அலுவலர்கள் ஆஜர்படுத்தினர். அங்கு வாகாஷை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி கோவிந்தராஜ் உத்தரவிட்டார். தொடர்ந்து வாகாஷுடன் சிபிஐ அலுவலர்கள் டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.
இதையும் படிங்க : விவசாயிகள் பெயரில் கடன் வாங்கி மோசடி