மத்திய அரசு நேற்று வெளியிட்ட பட்ஜெட்டில் எல்ஐசி பங்குகளை தனியாருக்கு கொடுக்கும் முடிவுக்கு எல்ஐசி ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கோவை கோட்ட எல்ஐசி அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதுகுறித்து, எல்ஐசி ஊழியர்கள் கூறுகையில், எல்ஐசியை தனியார் மயமாக்கும் முடிவினால் மக்களும், ஊழியர்களும் பாதிக்கப்படுவர் என்றும் லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வதால் நஷ்டம் தான் ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த தனியார்மயமாக்கல் முடிவை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:
அரசு ஊழியர்களுக்கு வீடு கட்டுவதற்கான முன் பணத்தொகை ரூ.40 லட்சமாக அதிகரிப்பு