ETV Bharat / state

பள்ளிகளில் விழிப்பணர்வு நிகழ்ச்சியால் 15 போக்சோ வழக்குகள் பதிவு - கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு பள்ளிகளில் பாலியல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் மூலம் 15 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.

பள்ளிகளில் விழிப்புனர்வு நிகழ்சியால் 15 போக்சோ வழக்குகள் பதிவு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 5, 2024, 6:44 PM IST

கோயம்புத்தூர்: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் இன்று (ஜன.5) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கடந்த 2023ஆம் ஆண்டு கோவை மாவட்ட காவல்துறை சார்பில் லைப் கார்டு, பள்ளிக்கூடம் 2.0, மிஷன் கல்லூரி, அதிநவீன சிசிடிவி கட்டுப்பாட்டு அறை என பல்வேறு திட்டங்களை துவங்கி செயல்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள பவானி ஆற்றில் விழுந்து சுற்றுலாப் பயணிகளின் உயிரிப்புகளைத் தடுக்கும் வகையில், கடந்த 2023 பிப்வரி மாதம் "லைப் கார்டு" என்ற பெயரில் மாவட்ட காவல்துறை சார்பில் 10 பேர் கொண்ட தனிக்குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவினர், கடந்த 2023ஆம் ஆண்டு மட்டும் ஆற்றில் தவறி விழுந்த 700 பேரை காப்பாற்றியுள்ளனர். மேலும் தற்கொலைக்கு முயன்ற 11 பேரை தடுத்து காப்பாற்றியுள்ளனர். கடந்தாண்டில் மட்டும் 'புரோஜெட் பள்ளிகூடம்' மூலம் 1.40 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு கொடுத்துள்ளோம். 35 பள்ளிகளைச் சேர்ந்த 1,500 மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் மொத்தம் 11 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஒரே ஆண்டில் ஆயிரத்து 950 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டில் 449 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 590 பேர் கைது செய்யப்பட்டு, 742 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் கல்லூரி மாணவர்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் மட்டும், 189 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி அருகே குட்கா பொருட்கள் விற்பனை செய்யும் 74 கடைகள் அகற்றப்பட்டுள்ளது. எச்சரிக்கையை மீறி குட்கா பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 120 கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு மட்டும் 47 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 5 கொலைகள் ஆதாய கொலைகள். இந்த வழக்குகளில் 79 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கொலை வழக்குகளில் 89 சதவீத வழக்குகளில் குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் கைது செய்துள்ளோம். அதிகபட்சமாக 3 நாட்களில் கொலை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் ஆயிரத்து 558 பேருக்கு பிணையில் வெளிவராத வாரண்ட் நீதிமன்றம் மூலம் பெற்றுள்ளோம்.

கடந்தாண்டு விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் 10 சதவீதம் குறைந்துள்ளது. சைபர் கிரைம் மூலம் 24 கோடி ரூபாயை பொதுமக்கள் இழந்துள்ளனர். மர்ம நபர்களின் வங்கிக் கணக்கில் இருந்த 31 கோடி முடக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகளில் நடத்தும் விழிப்புணர்வு நிகழ்சி மூலம் 15 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக 4.5 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள பவானி ஆற்றில் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க, காவல்துறை சார்பில் விரைவில் மின் அறிவிப்பு இயந்திரம் பொருத்த உள்ளது. தற்போது 19 இடத்தில் இந்த கருவிகளை பொருத்தி பவானி ஆற்றில் நீர் திறக்கும்போது முன்கூட்டியே அலாரம் ஒலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், பவானி ஆற்றங்கரையில் மீட்புப் பணிக்காக போடப்பட்ட போலீசாருக்கு சிறப்பு நீச்சல் உடை வடிவமைக்கப்பட்டு, விரைவில் அவை வழங்க உள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நெல்லையில் 9ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை; பள்ளி முன் நீதி கேட்டு போராடிய உறவினர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.