கோயம்புத்தூர்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் (TNPSC) தேர்வாணையத்தால் நடத்தப்படும் TNPSC Group IV தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் கோவை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 17ஆம் தேதி அன்று துவங்கப்படவுள்ளதாக கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-4 தேர்வுகளுக்கான இலவச பயிற்சிகளுக்கான வகுப்புகள் வரும் 17ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த பயிற்சிகளில் பயில விரும்புவோர்களுக்கான தகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி இந்த பயிற்சியில் பத்தாம் வகுப்பு அல்லது அதற்கும் மேல் கல்வித் தகுதி உள்ள அனைவரும் இவ்வகுப்பில் கலந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: ஓபிசி தேர்வர்களுக்கு விண்ணப்ப கால நீட்டிப்பு மறுப்பு - எய்ம்ஸ் பதிலை கண்டித்த எம்.பி. சு.வெங்கடேசன்
இப்பயிற்சியின் சிறப்பு அம்சங்களாக, தமிழ்வழி கல்வி மாணவர்களுக்கு உதவிடும் வகையில் வகுப்புகள் சிறப்பான பயிற்றுநர்களைக் கொண்டு செயல்படும். மேலும் பயிற்சிக்கான வகுப்புகள் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் நடத்தப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களின் திறன்மேம்பாட்டை வளர்க்கும் வகையில், இப்பயிற்சி வகுப்புகள் SmartBoard, இலவச Wifi வசதி, அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நூலக வசதி, பயிற்சி கால அட்டவணை, வாரத்தேர்வுகள், முழு மாதிரி தேர்வுகள் போன்றவற்றுடன் நடத்தப்பட்டு வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயிற்சியில் விரும்பும் மாணவர்கள், https://tamilnaducareerservices.tngov.in என்ற இணையத்தில் பதிவு
செய்து கொள்ளலாம். மேலும் இந்தப் பதிவேற்றத்தின் போது, மாணவர்கள் இலவசமாக பாடக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இத்திட்டத்தில் பயில விரும்பும் மாணவர்கள் எளிதாக விண்ணபிக்கும் முறையில் வழிவகை செய்துள்ளது.
மேலும் இதில் விண்ணப்பிக்க, மாணவர்கள் இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களை எடுத்துக்கொண்டு அலுவலகத்திற்கு நேரில் வருகை தந்து விவரங்களை பூர்த்தி செய்ய மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மனுதாரர்கள் மேட்டுப்பாளையம் சாலை, கவுண்டம்பாளையம் அடுத்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என்றும்; அல்லது studvcircleche@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாெறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணையை இன்று வெளியிடுகிறார் அமைச்சர் பொன்முடி!