கோவை : இன்று (அக்.01) புதிதாக 550 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை அம்மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 32 ஆயிரத்து 620ஆக உயர்ந்துள்ளது.
மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று 511 பேர் இன்று பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் கோவையில் மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 116ஆக உயர்ந்துள்ளது.
இன்று எட்டு பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 444ஆக உயர்ந்துள்ளது.