அவினாசிலிங்கம் மனையியல் கல்லூரி சார்பில் மனையியல் துறையின் எதிர்கால போக்கு, வளர்ச்சி, புதுமை கண்டுபிடிப்புகள் என்ற தலைப்பில் மாநாடு தொடங்கியுள்ளது. இந்த மாநாடானது இன்று முதல் மூன்று நாள்கள்வரை நடைபெற உள்ளது.
இன்று நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறையின் முதன்மைச் செயலர் மங்கத் ராம் சர்மா, யுனிவர்சிட்டி கிராண்ட் கமிஷனின் துணைத் தலைவர் பூஷன் பட்வர்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
மேலும், அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தின் நிர்வாக அறங்காவலர், மனையியல் துறையின் முதல்வர் வாசுகி ஆகியோர் உடனிருந்தனர். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு, கேரளா, டெல்லி, குஜராத், ஒரிசா போன்ற பல்வேறு பகுதிகளிலிருந்து 150க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், 500க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய யுனிவர்சிட்டி கிராண்ட் கமிஷனின் துணைத் தலைவர் பூஷன் பட்வர்தன், "உயர்கல்வித் துறையில் மாணவர்கள் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அதற்காக ஆசிரியர்களுக்கும் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி முதுகலை பயிலும் மாணவர்களுக்கு ஆறு மாதங்கள் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டமானது அனைத்து கல்வி நிறுவனங்களிலும் படிப்படியாக அமல்படுத்தப்பட உள்ளது" என்றார்.
இதையும் படிங்க: உணவு பழக்கவழக்கம் 2020' - புதுச்சேரியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி