கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கு தொடர்பாக உரிய விசாரணை எடுக்கக்கோரி தமிழகம் முழுவதிலும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் மூன்றாவது நாளாக வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இவ்வழக்கில் ஆளுங்கட்சி பிரமுகர்கள் தொடர்பு உள்ளிட்டவை குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் முழுமையாக விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்தினர்.
மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டணை வழங்க வேண்டுமெனவும் மாணவிகள் முழக்கமிட்டனர். இந்த போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட அரசுக் கலைக்கல்லூரி மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டனர்.