கோவை மதுக்கரைப் பகுதியில் உள்ள தனியார் சிமென்ட் ஆலையில் உற்பத்தி சம்பந்தப்பட்ட இடங்களில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் நிரந்தரத் தொழிலாளர்களுக்கும் இணையான ஊதியம் வழங்குவது, பணி நேரத்தைத் தாண்டி பணியாளர்களிடம் அதிக உழைப்பைப் பெறுவதைத் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை தனியார் சிமென்ட் ஆலை ஊழியர்கள் இரண்டாவது நாளாக காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஊழியர்கள் கூறுகையில், 'தொழிலாளர்களின் உரிமையைக் கேட்டால் ஆலை நிர்வாகம் அடக்குமுறையை ஏவி விடுகிறது. நிரந்தரத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு கொடுப்பனவு (Allowance) ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும்.
ஆலையில் ஒப்பந்தத் தொழிலாளர்களில் 60 பேர்தான் உள்ளூர் தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். 600 பேர் வரை வெளி மாநில தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. இது உள்ளூர் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் செயல்.
ஒப்பந்தத் தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து ஆலை நிர்வாகம் புறக்கணித்து வருகிறது. ஆலை நிர்வாகம் தங்கள் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி, உரிய உடன்பாடு ஏற்படும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை' என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: வங்கிக்கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை