ETV Bharat / state

கோவையில் ராட்சத பேனர் சரிந்த விபத்தில் 3 தொழிலாளிகள் பலி - கோவையில் ராட்சத பேனர்

Coimbatore Banner Collapses Accident: கோவை அருகே ராட்சத பேனர் சரிந்த விப்த்தில், 3 தொழிலாளிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இருவர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 1, 2023, 8:13 PM IST

Coimbatore Banner Collapses Accident: கோவை: கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அடுத்த வடுகபாளையம் பிரிவு அருகே சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி ராமசாமி என்பவரது என்பவருக்கு சொந்தமான இடத்தில் ராட்சத பேனர்கள் வைக்கும் பணி இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த பணியை சேலம் மாவட்டத்தை சார்ந்த பழனிச்சாமி என்பவர் எடுத்து செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்தப் பணியினை சேலத்தைச் சேர்ந்த 7 தொழிலாளர்கள் மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் இன்று (ஜூன் 1) மாலை ஆட்கள் இப்பணியினை செய்து கொண்டிருந்த போது, பலத்த காற்றுடன் மழை பெய்துள்ளது. அப்போது பழைய பேனரை அகற்றிவிட்டு புதிய பேனரை வைக்கும் பணி நடைபெற்று வந்தது. அப்போது திடீரென்று வேகமாக வீசிய பலத்த காற்றினால் சாரம் சரிந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதனால், அப்போது இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த சேலம் மாவட்டம் ஜலாண்டாபுரம் பகுதியை சார்ந்த குமார், குணசேகரன், சேகர் என்ற 3 தொழிலாளர்கள் சாரத்தின் அடியே சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையும் படிங்க: மணல் கடத்தலில் ஈடுபடும் கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஏரியில் இறங்கி மக்கள் போராட்டம்!!

இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த கருமத்தம்பட்டி போலீசார், பேனர்களை அகற்றி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அருண்குமார், சண்முகசுந்தரம் ஆகியோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கருமத்தம்பட்டி போலீசார் தலைமறைவாக உள்ள காண்ட்ராக்டர் பழனிச்சாமியை வலைவீசித் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: IT Raids: ஓய்ந்த அலை மீண்டும் மோதுகிறதா? அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் மீண்டும் ஐடி ரெய்டு!

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக உயரத்தில் பேனர்கள் அமைக்கப்பட்டதே, இந்த விபத்துக்கு காரணம் எனவும் சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரங்களில் அரசு அனுமதியின்றி நூற்றுக்கணக்கான ராட்சத பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். அவை பல ஆண்டுகள் பழமையானதால், திடீரென்று இவ்வாறு காற்றினால் விழும் அபாயம் உள்ளதாகவும், எனவே உடனடியாக, அரசு சேதமடைந்துள்ள பேனர்களை கண்டறிந்து அகற்ற வேண்டும் எனவும் அப்பகுதியினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது தவிர மாவட்டத்தின் பல இடங்களில் ராட்சத பேனர்கள் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதனையும் கண்டறிந்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: வேலூர் மலைக்கிராமத்தில் மற்றொரு சம்பவம்: விபத்தில் விவசாயி வாயில் குத்திய வாகன கம்பிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.