கோவை மாவட்டம் தடாகம் வீரபாண்டி, மாங்கரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அனுமதியின்றியும், விதிமுறைகளை மீறி பல நூறு அடிக்கு செம்மண் அள்ளப்படுவதற்கும் எதிராக ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கில், யானை வழித்தடங்களில் உள்ள செங்கல் சூளைகளை மூட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் சின்னத்தடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், சோமையம்பாளையம், பன்னிமடை ஆகிய பகுதிகளில் அனுமதியின்றிச் செயல்பட்டுவரும் செங்கல் சூளைகளுக்கு இன்றுமுதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை வடக்கு வட்டாட்சியர், மாசு கட்டுப்பாட்டு வாரியம், புவியியல் மற்றும் சுரங்கத் துறை சார்பில் செங்கல் சூளைகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுவருகிறது.
மேலும், அனுமதியின்றி இயங்கிவரும் 146 செங்கல் சூளைகள், 150 பச்சை கல் அடிக்கும் சூளைகளுக்கு நோட்டீஸ் ஒட்டப்பட்டுவருகிறது. இந்த நடவடிக்கைக்கு சூழல் ஆர்வலர்கள் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை- கணக்கில் வராத ரூ.80 கோடி பறிமுதல்