ETV Bharat / state

'இன்று ஒரு சின்னத்தம்பிதான்.. நாளை 100 சின்னத்தம்பி வருவான்..!'- எச்சரிக்கும் வனவிலங்கு ஆர்வலர் முரளிதரன்

சின்னத்தம்பியை கும்கியாக மாற்றினால்தான் உயிரோடு இருப்பான் என்றும், யானையை கும்கியாக மாற்றுவது குறித்தும் நிறைய விஷயங்களை விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் பகிர்ந்துள்ளார்.

சின்னத்தம்பி
author img

By

Published : Feb 6, 2019, 8:10 PM IST

'தூளியிலே ஆட வந்த வானத்து மின் விளக்கே' சின்னத்தம்பிக்கு அப்புறமா தமிழ்நாட்டுல பிரபலம் ஆன இன்னொரு சின்னத்தம்பி கோவை தடாகம் பகுதியில் ஊருக்குள் புகுந்த காட்டு யானை. சின்னத்தம்பி தனது செய்கைகளால் டிவி, ரேடியோ, இன்டர்நெட் மட்டுமல்லாது தமிழக மக்களின் நெஞ்சங்களிலும் இடம் பிடித்து விட்டான். ஊருக்குள் வந்த சின்னத்தம்பியை தூரமாக காட்டிற்குள் விட்டாலும் பழையபடி இங்கேயே 100 கிமீ. தூரத்துக்கு 'நடராஜா' சர்வீஸிலே வந்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தி விட்டான். இதை காட்டில் விடுவதா அல்லது கும்கியாக மாற்றுவதா என பெரிய களேபரம் ஆகி விவகாரம், கோர்ட் வரை சென்று விட்டது. ஆனால் கும்கியாக மாற்ற யானை துன்புறுத்தப்படுகின்றன என்று ஒருபுறம் குற்றம்சாட்டு வைக்கின்றனர்.

elephant
சின்னத்தம்பி
undefined

யானையை கும்கியாக்குவது என்பது நம் கட்டளைக்கு அதை கீழ்ப்படிய வைப்பது. யானையை மரத்தால் ஆன கூண்டுக்குள் விட்டு அதை 'மகவுட்' எனப்படும் பாகன்களை கொண்டு பழக்கப்படுத்துவர். 'மகா எத்தன்' என்பதே மருவி 'மகவுட்' என்றானது. அவர்கள் யானைகளை ஏமாற்றியே தனது வழிக்கு கொண்டு வருவார்கள். அவர்கள்தான் யானைக்கு உணவளிப்பார்கள். அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக யானையிடம் பழகி யானையின் நம்பிக்கையை பெறுவர். யானைகளை அடித்து, துன்புறுத்தி தன் வழிப்படுத்தும் வழக்கம் இருந்தது. தற்போதும் இருக்கிறது. ஆனால் அது மனிதாபிமானமற்ற செயல்.

தெப்பக்காடு யானைகள் முகாம் உலக பிரசித்தி பெற்றது. அங்கு பாகங்களின் கையில் 'அங்குசம்' எனும் ஈட்டி கூட இருக்காது. யானைகளிடம் மனித நேயத்துடன் பழகுகிறார்கள். கும்கி முறை என்பது மிகவும் கொடூரமானது என்று வெளிநாடுகளில் இருக்கும் வீடியோவை பார்த்து நம் மக்கள் தவறாக புரிந்துகொண்டுள்ளனர் என்பதை தெப்பக்காடு வந்து உணரலாம். சில அரைவேக்காட்டு விலங்கு ஆர்வலர்கள் தவறாக சித்தரித்து நம்மை மூளை சலவை செய்துள்ளனர். சின்னத்தம்பி யானை 100 கி.மீ நடந்தே வந்து விட்டது. காட்டுக்குள் செல்ல மறுக்கிறது. அதை மீண்டும் மீண்டும் விரட்டுவதால் வெறுப்படைந்து ஆட்கொல்லியாக மாறிவிட வாய்ப்புள்ளது. பின்னர் 'அவ்னி' புலியை போல நாமே அதை கொள்ளும் நிலை சின்னத்தம்பிக்கு வந்து விட கூடாது. அதற்கு பதிலாக அந்த யானையை விரட்டாமல் அது இருக்கும் இடத்திலேயே உணவளித்து 'தாஜா' செய்து நம் வழிக்கு கொண்டுவந்து விடலாம்.

elephant
சின்னத்தம்பி
undefined

சின்னத்தம்பி இலகுவான, சாதுவான யானை. அதை பழக்கி, பராமரித்து நல்ல காரியங்களுக்கு வைத்துக்கொள்ளலாம். சின்னத்தம்பியை அடக்க அழைத்து வந்திருக்கும் மாரியப்பன் ஒரு காலத்தில் சமயபுரம் கோயிலில் அடங்காமல் திரிந்தவனே. அது தெப்பக்காட்டில் பராமரிக்கப்பட்டு கும்கியாக மாற்றப்பட்டு நல்ல காரியங்களுக்கு பயன்படுகிறது. சின்னத்தம்பி கொலைகாரனாக மாறுவதிலிருந்து தப்பிக்கவும், நன்றாக வாழவும் கும்கியாக்குவதே சிறந்தது. காட்டிலிருந்து வெளியேறும் யானைகளை வனத்துறையினர் காட்டிற்குள் கொண்டுபோய் விட முயற்சி செய்வார்கள். ஆனால் இயந்திரங்களை பயன்படுத்தி அதை பிடிக்கும் விதம் தவறானது. அந்த காலத்தில் யானைகளுக்கு காயம் ஏற்படும் என்று சணல் கயறுகளையே பயன்படுத்தினர். யானைகளை மனிதாபிமான முறையில் கையாள வேண்டும்.

கோவை மதுக்கரை பகுதியில் அட்டகாசம் செய்து வந்த மதுக்கரை மகாராஜா யானையை பிடிப்பதற்காக மருத்துவர் போட்ட மயக்க ஊசி சரியாக வேலை செய்ய வில்லை. அதனால் 'ஓவர் டோஸ்' கொடுக்கப்பட்டது. அரை மயக்கத்தில் இருந்த யானையை கூண்டில் அடைத்தவுடன், மூர்க்கமான அந்த யானை கூண்டில் மல்லுக்கட்டியதில் தலையில் அடிபட்டு இறந்தது. இந்த சம்பவத்தினாலேயே யானையை கும்கியாக மாற்ற கூடாது என்ற மூடநம்பிக்கை நிலவி வருகிறது.

elephant
சின்னத்தம்பி
undefined

தெப்பக்காடு, டாப்ஸ்லிப் யானை முகாம்களில் காட்டுவாசி மக்களை கொண்டு பராமரிக்கப்படுகிறது. பழக்கத்திற்காக அடிக்கவும் செய்கின்றனர். இதற்கு நல்ல பழமொழியே இருக்கிறது. 'ஒடிச்சி வளக்காத முருங்கையும் அடிச்சி வளக்காத குழந்தையும் உருப்படாது'. சில விஷயங்களை மாற்ற முடியாது என்றால் அப்படி தான் செய்தாக வேண்டும். இதை நல்ல விஷயத்துக்காக செய்கிறோம். அதற்காக தினமும் அடித்துகொண்டே இருந்தால் ஒரு நாள் அவனையே யானை கொன்று விடும். 'சாது மிரண்டால் காடு கொள்ளாது'. அதுதான் சமயபுரம் மசினி யானைக்கும் நடந்தது.

யானையை அடித்து துன்புறுத்திக்கொண்டே இருந்தால் ஒரு நாள் அது பாகனையே கொன்று விடும். அது தவறான செயல். தெப்பக்காடு முகாமில் யானைகளை பாதுகாக்க அனைத்தையும் அங்கே வைத்துள்ளனர் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த 2017ல் எடுத்த கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 27 ஆயிரம் யானைகள் இருப்பதாக தெரிய வந்தது. இது உத்தேச கணக்கு என்பதால் அதில் 20 சதவீதத்தை ஒதுக்கி 20 ஆயிரம் என்றே கணக்கில் எடுத்துகொண்டோம்.

elephant
சின்னத்தம்பி
undefined

யானைகளின் இறப்பு விகிதம் ஒரு நாளைக்கு ஒரு யானை என்ற வீதத்தில் ஆண்டுக்கு 300 யானை என்று இருந்தது. ஆனால் கடந்த ஆண்டில் அதன் எண்ணிக்கை ஆயிரம் ஆனது. இறப்பு விகிதம் வரும் காலத்தில் அதிகரித்து யானை இனமே இல்லாமல் போய்விடும். இதற்கு காரணம் வலசை எனப்படும் யானை வழித்தடங்களை மறைத்து அவற்றின் அழிவுக்கு வித்திட்டதே ஆகும்.

யானைகள் தான் வசிக்கும் இடத்தில் உணவு பஞ்சம் ஏற்படும் காலங்களில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா என்று இடம் பெயரும். அந்த வலசைகளை ஆக்கிரமித்து தற்போது தொழில்நிறுவனங்களும், குடியிருப்புகளும் வந்து விட்டன. அதனால் யானைகள் ஊருக்குள் விஜயம் செய்து விளைச்சலை நாசப்படுத்துகின்றன. இந்தியாவில் உள்ள தனியார் யானைகள் 3 ஆயிரத்தை நெருங்கும்.

ஒரு ஆச்சர்யப்படக்கூடிய விஷயம் என்னவென்றால் காட்டில் வசிக்கும் யானைக்கு சராசரி ஆயுள் 40 வருடம். ஆனால் தனியார் வளர்க்கும் யானைகள் சரியான பராமரிப்பினால் 60 - 70 வருடம் வரை வாழ்கின்றன. வனத்தில் வாழும் யானைகளுக்கு பல்வேறு அச்சுறுத்தல் வந்து கொண்டே இருக்கின்றன. வலசை இல்லாமல் போவது, இருப்பிடம் இல்லாமல் போவது, தற்போது பிளாஸ்டிக்கை தின்றுகூட யானை இறந்து போயுள்ளது. இதை தான் நாம் தடுக்க வேண்டும்.

elephant
சின்னத்தம்பி
undefined

இதை தடுக்க கேரளா, கர்நாடகா அரசோடு தமிழக அரசும் கலந்து பேசி யானைகளை காக்க முன் வர வேண்டும். அரசு சார்பில் யானைகள் உலாவும் வகையில் பெரிய காப்பகம் அமைக்க வேண்டும். அதை பார்க்க சுற்றுலா பயணிகள் வருவார்கள். வருமானமும் வரும், யானைகளும் பாதுகாக்கப்படும். இலங்கையில் பின்னவாலா என்ற இடத்தில இருக்கும் யானைகள் முகாமில் நாமே யானைகளை குளிப்பாட்டலாம், சவாரி போகலாம். அதைப்போல இங்கேயும் உருவாக்கலாம்.

சின்னத்தம்பி சாதுவான யானைதான். அதை எளிதில் பழக்கப்படுத்தலாம். அவனை பற்றி கவலை வேண்டாம். இதை விட பெரிய அபாயம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது. தற்போது ஒரு சின்னதம்பிதான் வந்துள்ளான், நாளை 100 சின்னத்தம்பி ஊருக்குள் வந்து அடம் பிடிப்பான். இவற்றுக்கான காரணத்தை நாம் கண்டறிந்து சரி செய்யா விட்டால் பேரிடர் நிகழும் என அடித்து சொல்கிறார் விலங்கு நல ஆர்வலர் முரளிதரன்.

யானை இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் அற்புதமான விலங்கு. இது மிகவும் சொற்ப அளவிலேயே இங்குள்ளது. யானைகளை தேசிய பாரம்பரிய விலங்காக அறிவிக்கப்பட்டும் இதை காப்பாற்ற முடியவில்லை. வனம் மற்றும் விலங்குகள் மீதான தவறான புரிதலே மனித - மிருக மோதல்களுக்கு காரணமாக உள்ளது. எனவே 'எல்லாம் தனக்கே' என்ற போக்கை மனிதர்கள் கைவிட்டு வனத்தை விலங்குகளிடமே கொடுக்க வேண்டும். வாழு! வாழ விடு!

Intro:Body:

சென்னை / வி.டி. விஜய் / சிறப்பு செய்தி / ரெகுலர் பிரிவுக்கு .................

இன்று ஒரு சின்னத்தம்பிதான்; நாளை 100 சின்னத்தம்பி வருவான்  

எச்சரிக்கும் வன விலங்கு ஆர்வலர் முரளிதரன் 

'தூளியிலே  ஆட வந்த வானத்து மின் விளக்கே' சின்னத்தம்பிக்கு அப்புறமா தமிழ்நாட்டுல பிரபலம் ஆன இன்னொரு சின்னத்தம்பி  கோவை தடாகம் பகுதியில் ஊருக்குள் புகுந்த காட்டு யானை.  சின்னத்தம்பி தனது செய்கைகளால் டிவி, ரேடியோ, இன்டர்நெட் மட்டுமல்லாது தமிழக மக்களின் நெஞ்சங்களிலும் இடம் பிடித்து விட்டான். ஊருக்குள் வந்த சின்னத்தம்பியை தூரமாக காட்டிற்குள் விட்டாலும் பழையபடி இங்கேயே 100 கிமீ. தூரத்துக்கு 'நடராஜா' சர்வீஸிலே வந்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தி விட்டான். இதை காட்டில் விடுவதா அல்லது கும்கியாக மாற்றுவதா என பெரிய களேபரம் ஆகி விவகாரம் கோர்ட் வரை சென்று விட்டது. ஆனால் கும்கியாக மாற்ற யானை துன்புறுத்தப்படுகின்றன என்று ஒருபுறம் குற்றம்சாட்டு வைக்கின்றனர். சின்னத்தம்பியை கும்கியாக மாற்றினால்தான் உயிரோடு இருப்பான் என்றும், யானையை கும்கியாக மாற்றுவது குறித்தும் நிறைய விஷயங்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன்.

யானையை கும்கியாக்குவது என்பது நம் கட்டளைக்கு அதை கீழ்ப்படிய வைப்பது. யானையை மரத்தால் ஆன கூண்டுக்குள் விட்டு அதை  'மகவுட்'  எனப்படும் பாகன்களை கொண்டு பழக்கப்படுத்துவர். 'மகா எத்தன்' என்பதே மருவி 'மகவுட்' என்றானது. அவர்கள் யானைகளை ஏமாற்றியே தனது வழிக்கு கொண்டு வருவார்கள். அவர்கள்தான் யானைக்கு உணவளிப்பார்கள். அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக யானையிடம் பழகி யானையின் நம்பிக்கையை பெறுவர். யானைகளை அடித்து, துன்புறுத்தி தன் வழிப்படுத்தும் வழக்கம் இருந்தது. தற்போதும் இருக்கிறது. ஆனால் அது மனிதாபிமானமற்ற செயல். 

தெப்பக்காடு யானைகள் முகாம் உலக பிரசித்தி பெற்றது. அங்கு பாகங்களின் கையில் 'அங்குசம்' எனும் ஈட்டி கூட இருக்காது. யானைகளிடம் மனித நேயத்துடன் பழகுகிறார்கள். கும்கி முறை என்பது மிகவும் கொடூரமானது என்று வெளிநாடுகளில் இருக்கும் வீடியோவை பார்த்து நம் மக்கள் தவறாக புரிந்துகொண்டுள்ளனர் என்பதை தெப்பக்காடு வந்து உணரலாம். சில அரைவேக்காட்டு விலங்கு ஆர்வலர்கள் தவறாக சித்தரித்து நம்மை மூளை சலவை செய்துள்ளனர்.       

சின்னத்தம்பி யானை 100 கி.மீ நடந்தே வந்து விட்டது. காட்டுக்குள் செல்ல மறுக்கிறது. அதை மீண்டும் மீண்டும் விரட்டுவதால் வெறுப்படைந்து ஆட்கொல்லியாக மாறிவிட வாய்ப்புள்ளது. பின்னர் 'அவ்னி' புலியை போல நாமே அதை கொள்ளும் நிலை சின்னத்தம்பிக்கு வந்து விட கூடாது. அதற்கு பதிலாக அந்த யானையை விரட்டாமல் அது இருக்கும் இடத்திலேயே உணவளித்து 'தாஜா' செய்து நம் வழிக்கு கொண்டு விடலாம். சின்னத்தம்பி இலகுவான,சாதுவான யானை. அதை பழக்கி, பராமரித்து நல்ல காரியங்களுக்கு வைத்துக்கொள்ளலாம்.

சின்னத்தம்பியை அடக்க அழைத்து வந்திருக்கும் மாரியப்பன் ஒரு காலத்தில் சமயபுரம் கோயிலில் அடங்காமல் திரிந்தவனே. அது தெப்பக்காட்டில் பராமரிக்கப்பட்டு கும்கியாக மாற்றப்பட்டு நல்ல காரியங்களுக்கு பயன்படுகிறது. சின்னத்தம்பி கொலைகாரனாக மாறுவதிலிருந்து தப்பிக்கவும், நன்றாக வாழவும் கும்கியாக்குவதே சிறந்தது. காட்டிலிருந்து வெளியேறும் யானைகளை வனத்துறையினர் காட்டிற்குள் கொண்டுபோய் விட முயற்சி செய்வார்கள். ஆனால் இயந்திரங்களை பயன்படுத்தி அதை பிடிக்கும் விதம் தவறானது. அந்த காலத்தில் யானைகளுக்கு காயம் ஏற்படும் என்று சணல் கயறுகளையே பயன்படுத்தினர். யானைகளை மனிதாபிமான முறையில் கையாள வேண்டும்.  

கோவை மதுக்கரை பகுதியில் அட்டகாசம் செய்து வந்த மதுக்கரை மகாராஜா யானையை பிடிப்பதற்காக மருத்துவர் போட்ட மயக்க ஊசி சரியாக வேலை செய்ய வில்லை. அதனால் 'ஓவர் டோஸ்' கொடுக்கப்பட்டது.  அரை மயக்கத்தில் இருந்த யானையை கூண்டில் அடைத்தவுடன், மூர்க்கமான அந்த யானை கூண்டில் மல்லுக்கட்டியதில் தலையில் அடிபட்டு இறந்தது. இந்த சம்பவத்தினாலேயே யானையை கும்கியாக மாற்ற கூடாது என்ற மூடநம்பிக்கை நிலவி வருகிறது. 

தெப்பக்காடு, டாப்ஸ்லிப் யானை முகாம்களில் காட்டுவாசி மக்களை கொண்டு பராமரிக்கப்படுகிறது. பழக்கத்திற்காக அடிக்கவும் செய்கின்றனர். இதற்கு நல்ல பழமொழியே இருக்கிறது. 'ஒடிச்சி வளக்காத முருங்கையும் அடிச்சி வளக்காத குழந்தையும் உருப்படாது'. சில விஷயங்களை மாற்ற முடியாது என்றால் அப்படி தான் செய்தாக வேண்டும். இதை நல்ல விஷயத்துக்காக செய்கிறோம். அதற்காக தினமும் அடித்துகொண்டே இருந்தால் அவனையே யானை கொன்று விடும். 'சாது மிரண்டால் காடு கொள்ளாது'. அதுதான் சமயபுரம் மசினி யானைக்கும் நடந்தது. யானையை அடித்து துன்புறுத்திக்கொண்டே இருந்தால் ஒரு நாள் அது பாகனையே கொன்று விடும். அது தவறான செயல். தெப்பக்காடு முகாமில் யானைகளை பாதுகாக்க அனைத்தையும் அங்கே வைத்துள்ளனர் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

கடந்த 2017ல் எடுத்த கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 27 ஆயிரம் இருப்பதாக தெரிய வந்தது. இது உத்தேச கணக்கு என்பதால் அதில் 20 சதவீதத்தை ஒதுக்கி 20 ஆயிரம் என்றே கணக்கில் எடுத்துகொண்டோம். யானைகளின் இறப்பு விகிதம் ஒரு நாளைக்கு ஒரு யானை என்ற வீதத்தில் ஆண்டுக்கு 300 யானை என்று இருந்தது. ஆனால் கடந்த ஆண்டில் அதன் எண்ணிக்கை ஆயிரம் ஆனது. இறப்பு விகிதம் வரும் காலத்தில் அதிகரித்து யானை இனமே இல்லாமல் போய்விடும். இதற்கு காரணம் வலசை எனப்படும் யானை வழித்தடங்களை மறைத்து அவற்றின் அழிவுக்கு வித்திட்டதே ஆகும். 

யானைகள் தான் வசிக்கும் இடத்தில் உணவு பஞ்சம் ஏற்படும் காலங்களில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா என்று இடம் பெயரும். அந்த வலசைகளை ஆக்கிரமித்து தற்போது தொழில்நிறுவனங்களும், குடியிருப்புகளும் வந்து விட்டன. அதனால் யானைகள் ஊருக்குள் விஜயம் செய்து விளைச்சலை நாசப்படுத்துகின்றன. இந்தியாவில் உள்ள தனியார் யானைகள் 3 ஆயிரத்தை நெருங்கும். ஒரு ஆச்சர்யப்படக்கூடிய விஷயம் என்னவென்றால் காட்டில் வசிக்கும் யானைக்கு சராசரி ஆயுள் 40 வருடம். ஆனால் தனியார் வளர்க்கும் யானைகள் சரியான பராமரிப்பினால் 60 - 70 வருடம் வரை வாழ்கின்றன. வனத்தில் வாழும் யானைகளுக்கு பல்வேறு அச்சுறுத்தல் வந்து கேடே இருக்கின்றன. வலசை இல்லாமல் போவது, இருப்பிடம் இல்லாமல் போவது, தற்போது புதிதாக பிளாஸ்டிக்கை தின்றுகூட யானை இறந்து போயுள்ளது. இதை தான் நாம் தடுக்க வேண்டும். இதை தடுக்க கேரளா, கர்நாடகா அரசோடு தமிழக அரசும் கலந்து பேசி யானைகளை காக்க முன் வர வேண்டும்.  

அரசு சார்பில் யானைகள் உலாவும் வகையில் பெரிய காப்பகம் அமைக்க வேண்டும். அதை பார்க்க சுற்றுலா பயணிகள் வருவார்கள். வருமானமும் வரும், யானைகளும் பாதுகாக்கப்படும். இலங்கையில் பின்னவாலா  என்ற இடத்தில இருக்கும் யானைகள் முகாமில் நாமே யானைகளை குளிப்பாட்டலாம், சவாரி போகலாம். அதைப்போல இங்கேயும் உருவாக்கலாம். சின்னத்தம்பி சாதுவான யானைதான். அதை எளிதில் பழக்கப்படுத்தலாம். அவனை பற்றி கவலை வேண்டாம். இதை விட பெரிய பிரச்னை வரும் அபாயம் நம்மை நெருங்குகிறது. தற்போது ஒரு சின்னதம்பிதான் வந்துள்ளான், நாளை 100 சின்னத்தம்பி ஊருக்குள் வந்து அடம் பிடிப்பான். இவற்றுக்கான காரணத்தை நாம் கண்டறிந்து சரி செய்யா விட்டால் பேரிடர் நிகழும் என அடித்து சொல்கிறார். 

யானை இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் அற்புதமான விலங்கு. இது மிகவும் சொற்ப அளவிலேயே இங்குள்ளது. யானைகளை தேசிய பாரம்பரிய விலங்காக அறிவிக்கப்பட்டும் இதை காப்பாற்ற முடியவில்லை. வனம் மற்றும் விலங்குகள் மீதான தவறான புரிதலே மனித - மிருக மோதல்களுக்கு காரணமாக உள்ளது. எனவே 'எல்லாம் தனக்கே' என்ற போக்கை மனிதர்கள் கைவிட்டு வனத்தை விலங்குகளிடமே கொடுக்க வேண்டும். வாழு! வாழ விடு!!

visual are sent by reporter app. kit no:55 

--

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.