கோயம்புத்தூர் மாவட்டத்தில் இயற்கை விவசாயம் குறித்தும், அதை பள்ளி பாடத் திட்டத்தில் கொண்டுவருவதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தக் கோரியும் விவசாயிகள் போல் வேடமணிந்து சிறுவர்கள் மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டனர். போட்டியில் சிறுவர்களின் பெற்றோரும் கலந்துகொண்டனர்.
மாரத்தான் நிகழ்ச்சியானது தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியை கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் சிறுவர்கள் தமிழர்களின் பாரம்பரிய உடைகளை அணிந்துகொண்டு மாரத்தானில் பங்கேற்றது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. போட்டியில் கலந்துகொண்ட சிறுவர்களுக்குச் சான்றிதழ்கள், மரக்கன்றுகள் ஆகியவை வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: கடலையும் உடலையும் நம்பி பல ஆண்டுகளாக கடல் பாசி எடுத்துவரும் சின்னப்பாலம் பாட்டிகள்!