ETV Bharat / state

கிராமிய பாடலுக்கு ஒயிலாட்டம் ஆடிய குழந்தைகள்; கண்களை கவரும் வீடியோ

கோவை அருகே கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சி ஒன்றில் கண்ணிலே தோன்றினாள் என்ற கிராமிய பாடலுக்கு பெண்கள், குழந்தைகள் ஒயிலாட்டம் ஆடியது காண்போரை வெகுவாக கவர்ந்தது.

கிராமிய பாடலுக்கு ஒயிலாட்டம் ஆடிய  குழந்தைகள்

author img

By

Published : Oct 29, 2022, 8:35 PM IST

Updated : Oct 29, 2022, 8:40 PM IST

கோயம்புத்தூர்: சூலூர் அருகே உள்ள கருமத்தம்பட்டியில், நூற்றாண்டு பழமை வாய்ந்த மாகாளியம்மன் மற்றும் மாரியம்மன் கோயில் புனரமைக்கப்பட்டு குடமுழுக்கு செய்யப்பட்டது. இதனையொட்டி சங்கமம் கலைக் குழு சார்பில் 37-ஆவது ஒயிலாட்ட அரங்கேற்றம் நடைபெற்றது. இதில் கருமத்தம்பட்டியை சார்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் வயது வித்தியாசம் இன்றி குழுவாக இணைந்து கிராமியப் பாடல்களுக்கு நடனமாடினர்.

சமூக கருத்துகளையும், உள்ளூர் நடப்புகளையும் விளக்கும் பாடல்களை தற்போதைய காலத்திற்கு ஏற்ப மாற்றி இசைத்து அரங்கேற்றம் செய்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக கண்ணெதிரே தோன்றினாள் என்ற பாடலுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் ஒரு சேர ஒயிலாட்ட நடனமாடியது பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

ஒயிலாட்டம் ஆடிய குழந்தைகள், பெண்கள்

ஒயிலாட்ட நிகழ்ச்சியை கருமத்தம்பட்டி அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். சங்கமம் கோயில் ஆட்டம் கலைக்குழுவில் ஒருங்கிணைப்பாளரும் அரசு பள்ளி தலைமை ஆசிரியருமான கனகராஜ் இதுவரை கோவை மாவட்டத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு இலவசமாக ஒயிலாட்டம் கற்றுக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சூரசம்ஹாரம்: பழனியில் சூரன் உருவபொம்மை தயாரிக்கும் பணி தீவிரம்

Last Updated : Oct 29, 2022, 8:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.